என் வீட்டில் நான்தான் சார் ராணி...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் எதற்காக வேலைக்கு போக வேண்டும்... உங்கள் மகள்கள் ஏன் வேலைக்கு போக வேண்டும் என்கிற விவாதம் வரும் ஞாயிறு விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

தங்களது மகள்கள் வேலைக்கு போய் சம்பாதித்து சொந்த காலில் நிற்க வேண்டும் என்று விருப்பப்படும் அம்மா... தங்கள் சுய சம்பாத்தியத்தில் ஜாம் ஜாம் என்று வாழ்வதாக சொல்லும் பெண்கள்..

கணவர் சம்பாத்தியத்தில் நான் ராணி மாதிரி வாழ்கிறேன்.. என் வீட்டில் நான்தான் சார் ராணி என்று சொல்லும் பெண்கள் என்று வித்தியாசமான கருத்துக்கள் விவாதங்களாக அரங்கேறி உள்ளன.

 ஒரு சம்பாத்தியம்

ஒரு சம்பாத்தியம்

சார் எங்க வீட்டில் கணவர் சம்பாதிக்கிறார்...நான் மட்டும் வேலைக்கு போனால் போதும்னு சொல்லிவிட்டார். ஒருத்தர் சம்பாத்தியத்தில் நன்றாகத்தான் சார் வாழ்கிறோம் என்று ஒரு பெண் சொன்னார். சொல்வதற்கு நன்றாக இருக்கலாம் சார்...இவர்கள் எல்லாரும் சம்பாதிக்கும் ஒரு கணவனை அடிமையாக பெற்று இருக்கிறார்கள் சார் என்று ஒரு பெண் சொன்னார்.

 அடிமை என்று இல்லை

அடிமை என்று இல்லை

அடிமை என்று ஒன்றும் இல்லை சார்.. அவர் யார் என் கணவர்.. அவர் சம்பாதித்து நான் சந்தோஷமாக வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார். இப்படி நினைத்தே இவர்கள் கிணற்றுத் தவளையாக வாழ்கிறார்கள் என்று முதலில் பேசிய பெண் கூறினார். அதற்கு இரண்டாவது பேசிய பெண்.. வீட்டில் இருக்கும் பெண்களை கிணற்றுத் தவளை என்று சொல்லிவிடாதீர்கள் என்று கோபமாக கூறினார்.

 ஹேர் பின் வாங்க

ஹேர் பின் வாங்க

ஒரு ஹேர் பின் வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு காசு எப்படி கிடைக்கும் என்று முதல் பெண் கேட்டார். என் கணவரிடம்தான் வாங்குவேன் என்று இரண்டாவது பெண் கூறினார். அப்போ ஒரு ஹேர் பின் வாங்க வேண்டும் என்றால் கூட உங்கள் கணவரின் கையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு வாழ்கிறீர்கள் என்று கூறினார் முதல் பெண்.

 நான் அடிமை இல்லை

நான் அடிமை இல்லை

சார்.. நான் யார்கிட்டே சார் காசு வாங்கறேன்..என் கணவர்கிட்டேதான் சார் எனக்குத் தேவையான காசு வாங்கறேன்...நான் யார்கிட்டேயும் அடிமையா இருந்து வேலை பார்க்கணும்னு அவசியம் இல்லை சார். என் வீட்டில் நான் ராணியா வாழ்ந்துகிட்டு இருக்கேன் சார்னு சொன்னார். இப்படி போகுது விவாதம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+