கூட்டம்ணா எனக்கு அலர்ஜி.. கூச்சப்படுவேன்.. சிலிர்க்கும் ஓவியா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் காஞ்சனா 3 படத்தின் மியூசிக் ஆல்பம் வெளியிட்டார்கள். லாரன்ஸ் படம்னாலே குழந்தைங்களுக்கு குஷியாயிரும். அதனால்தானோ என்னவோ, அவரின் படங்கள் ஏப்ரல், மே மாதங்களில்தான் வெளியாகும்.

காஞ்சனா 3 படத்தில் வேதிகா, ஓவியா இரு நடிகைகள் நடிச்சுருக்காங்க. பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக்கிட்ட பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது.

நடிகை ஓவியா ஒப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு ஒரு தனி மாதிரியான கேரக்டர்னாலும், சுவையான கேரக்டரும் கூட. நல்ல மனதுக்கு சொந்தக்காரர். அன்பை காட்டினா அன்பை காட்டுவார், வெறுப்பை காட்டினா ஒதுங்கி போயிருவார்.

எப்போதும்

எப்போதும்

செட்ல எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்கும் ஓவியா, ரொமான்ஸ் மூடிலும் இருப்பாராம். இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்க பொண்னு எழவு வீட்டுக்கு யாரும் கூட்டிட்டு போயிடாதீங்கன்னு நடிகர் சூரி சொன்னாராம். அதை ஓவியா மேடையில் இருக்கும்போது சூரி மீண்டும் சொன்னார்.

சாவு வீடு

சாவு வீடு

நான் போறதே இல்லை.. சின்ன புள்ளையிலேர்ந்தே நான் சாவு வீட்டுக்கு போனதில்லைன்னு ஓவியா சொல்ல, அதிர்ந்துவிட்டார் சூரி. என்னம்மா சொல்றே நிஜமாவான்னு சூரி கேட்டார்.ஆமா, சாவு வீட்டுக்கு மட்டுமில்லை, கல்யாண வீட்டுக்கு கூட போ மாட்டேன், சின்னதிலிருந்து போனதும் இல்லைன்னு சொல்லி மேலும் அதிர வச்சார்.

ஒரு மாதிரி

ஒரு மாதிரி

எனக்கு கூட்டத்தை பார்த்தா ஒரு மாதிரி ஆயிரும். எனக்கு கம்ஃபர்ட்டா இருக்காது. நான் என்னவோ மாதிரி ஆயிருவேன்னு சொன்னார் ஓவியா.. உன் கல்யாணத்துக்கு எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சு கூட்டத்தை கூப்பிடுவியான்னு சூரி கேட்க, நடக்கறப்போ பார்க்கலாம்னு சொல்லிட்டு, மீண்டும் எனக்கு கூட்டம்னா பிடிக்காதுன்னு சொன்னார்.

பிடிக்குமா

பிடிக்குமா

என்னை உங்களுக்கு பிடிக்குமான்னு லாரன்ஸை பார்த்து ஓவியா கேட்க, புடிச்சதுனாலதானே ஹீரோயினியா நடிக்க வச்சேன்.. ரொம்ப புடிக்கும் ஓவியான்னு சொன்னார் லாரன்ஸ்.

பிடிச்சது

பிடிச்சது

லாரன்ஸ் மாஸ்டர் கிட்ட பிடிச்ச 5 விஷயம் பத்தி கேட்டபோது, அவர் எப்போதும் ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்ஸ் கூட கூலா ஹேண்டில் பண்ணுவார். அவரோட ஸ்ட்ரெஸ்ஸை நம்ம மேல திணிக்க மாட்டார்.அவர் சிரிப்பு பிடிக்கும். யார் வந்தாலும் எழுந்து நின்னு பேசி மரியாதையா நடந்துக்குவார். அவரோட டான்ஸுக்கு நான் ஃபேன் என்று சொன்னார்.

5 இடத்தில்

5 இடத்தில்

இந்தியாவில் டான்ஸ் மாஸ்டர்னு சொன்னா முதல் 5 இடத்துல மாஸ்டர் கட்டாயம் இருப்பார்னு ஓவியா சொல்ல, முதல் 5 இடத்தை பிரபு தேவா மாஸ்டருக்கு குடுத்துடுவோம். அங்கிருந்து வந்தவங்கதான் நாங்க எல்லாம். 6 வது இடத்தை வேணா நாம எடுத்துக்கலாம்னு லாரன்ஸ் சொன்னார். உடனே ஓவியா எனக்கு 7 வது இடம்னு சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

ஆர்மி

ஆர்மி

ஓவியா ஏன் இவ்வளவு வெகுளியா இருக்கார். அல்லது அவருக்குள்ள புத்திசாலி வளர்ந்த பெண்ணும், வெகுளியான குழந்தையும் இருக்கிறார்களா? நடிக்கும்போது கூட்டம் இருந்தால் எப்படி நடிப்பார். பல கேள்விகள் இருக்கு. ஐயோ.. ஓவியா ஆர்மி... வேணாம்டா சாமி முடிச்சுக்கலாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+