என்ன இவ்ளோ கருப்பா இருக்கான்... அய்யே எனக்கு வேணாம்!
சென்னை: சன் டிவியின் சூப்பர் சிஸ்டர்ஸ் நிகழ்ச்சி பார்க்க ரொம்ப நெகிழ்வா..சில சமயம் நகைச்சுவையாவும் போயிகிட்டு இருக்கு.
இதில் பிரியமானவளே சீரியலில் மூத்த மருமகளா நடிக்கும் அவந்திகாவின் நிஜப்பெயர் சிவரஞ்சனி. இவர் தனது தம்பியுடன் வந்திருந்தார்.அவர் பேரு ஹரிஹரன்.

முதலில் தம்பி பாப்பாதான் தனக்கு வேணும்னு சாமிகிட்ட வேண்டிக்கிட்டு இருந்தாராம். வீட்டுல எல்லாரும் நீ கேட்டபடியே தம்பி பாப்பா பொறந்திருக்கான். வந்து பாருன்னு அழைச்சுட்டு போனாங்களாம்.

போயி பார்த்தா கருப்பா இருந்தானாம் தம்பி பாப்பா. என்ன இவளோ கருப்பா இருக்கான்..இந்த தம்பி பாப்பா எனக்கு வேணாம்னு சொல்லிட்டு வெளியில் ஒடி வந்துட்டாராம்.

அப்புறம் போகப்போக பாசம் வந்துருச்சுன்னு சொன்னார். இதே போல சுமங்கலி சீரியலில் அனுவாக நடிக்கும் நடிகையின் பெயர் திவ்யா,தம்பி பேர் தினேஷ் குமார்.
இவங்க எப்பவும் பாசத்தை வெளிக்காட்டிக் கொண்டது இல்லையாம். சோ, பர்த் டே கிப்ட் தரணும்னு ஆசைப்பட்டார். அக்காவுக்கு ரத்தின கம்பளம் விரித்து, அரியாசனத்தில் அமர வைத்து கிரீடம் அணிவித்து மகிழ்ந்தார்.

இப்படி சில பேருடைய நினைவுகள் நகைச்சுவை, மகிழ்ச்சியான்னு இருந்தாலும், சில சீரியல் நடிகைகள் பகிர்ந்துக்கறது நமக்கே கண்ணில் நீரை வரவழைக்குது.












Click it and Unblock the Notifications