பெருமாளே நேக்கு வெக்க வெக்கமா வருதே.. காதல் கசியும் ஸ்ரித்திகாவின் "மலர்" குரல்!
சென்னை: ஸ்ரித்திகா... வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகம். தனுஷுக்கு தங்கச்சியா.வேங்கை...இப்படி சில படங்களில் நடித்த இவர் மலேசிய மங்கை.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்து, நடிக்க ஆரம்பிச்சார். சொல்லிக்கற மாதிரி வாய்ப்பு இல்லை. அந்த சமயத்துலதான் திருமுருகன் இயக்கத்துல நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரம் லட்டு மாதிரி கிடைச்சுது.
மலராக நடித்து அனைவரின் மனதையும் அள்ளிய ஸ்ரித்திகா, இப்போ சன் தொலைக்காட்சியின் கல்யாண பரிசு தொடரில் நடிச்சுகிட்டு இருக்கார். சீரியலில் கோபம் கொப்பளிக்கும், அனல் பறக்கும் கதாபாத்திரம்.

திங்க ஆசையா...
யாரடி நீ மோகினியில நடிகை நயன்தாரா தங்கையா நடிச்ச சரண்யாவுக்கு டப்பிங் பேச யுனிக் வாய்ஸ் வேணும்னு கேட்டாங்களாம். அப்போதான் ரெண்டு லட்டு திங்க ஆசையான்ற மாதிரி, தோழி மூலமா அந்த வாய்ப்பு கிடைச்சு இருக்கு.

யு திங்க்?
தனுஷ் நயன்தாராவை காதலிக்க, நயனுக்கு முறைப்பையனுடன் கல்யாண ஏற்பாடுகள் நடக்குது.இருந்தாலும் தனுஷை அவரால் விட்டுக் கொடுக்க முடியலை. இந்த சமயத்துலதான் தங்கச்சி சரண்யாவுக்கு தனுஷ் மேல லவ்.

அதைதான்க்கா சொல்றது...
தான் தனுஷை லவ் பண்ற விஷயத்தை நயனிடம் சரண்யா சொல்ல, அதிர்ந்து நிக்கறார் நயன். ஆனா, இவரோ பெட்ல குப்புறப் படுத்துகிட்டு, ஐயோ.. பெருமாளே நேக்கு வெக்கம் வெக்கமா வருதேன்னு முகத்தை மூடிக்குவார். அந்த இனிப்பான, பொருத்தமான குரலுக்கு சொந்தக்காரர் நம்ம ஸ்ரித்திகா. அது சரி, அப்புறம் ஏன் நீங்க டப்பிங் பேசலை?

நேரமில்லையே!
எனக்கு நடிக்கறதை விட டப்பிங் பேசத்தான் ஆசை. ஆனா, அடுத்தடுத்து சீரியல் கமிட் ஆயிருது. நிச்சயமா டப்பிங் பேசுவேன் அதுவும் நயன்தாராவுக்கு பொருத்தமா என்னால டப்பிங் பேச முடியும். அதை ஒரு சேலஞ்சா எடுத்துக்கிட்டு இருக்கேன். வாய்ப்பு கிடைச்சா... அவர் நடை உடை பாவனைக்கு ஏத்த மாதிரி பேசுவேன் என்கிறார்.

சிறப்பு அம்சம்.
டப்பிங்தானேன்னு சுலபமா சொல்லிடறோம்... கதாபாத்திரம் நடிக்கும்போது கண்ணுல தண்ணி வராது. ஆனா குரலில் அழுகையின் கலக்கம் தெரியும். அப்போதான் அந்த காட்சியின் தாக்கம் நமக்கு தெரியும். இதுதான் டப்பிங் பேசுபவரின் சிறப்பு அம்சம்.
இவரது ஆசை நிறைவேறட்டும்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications