For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Kodeeswari: கலாட்டா பிளஸ் கலகலப்பான ரஜினியை மிஸ் பண்றேன்...நடிகை மீனா

Google Oneindia Tamil News

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை மீனா, பல விஷயங்களை நிகழ்ச்சித் தொகுப்பாளர் ராதிகா சரத்குமாருடன் பகிர்ந்துக்கொண்டார். அப்போதுதான் கலாட்டா பிளஸ் கலகலப்பான ரஜினியை மிஸ் பண்றேன் என்று கூறினார்.

மீனா தனது பெண் குழந்தை நைனிகா பற்றியும், நைனிகாவிடம் மாட்டிக்கொண்டு அவர் அம்மா விழிப்பது குறித்தும் பேசினார்.கருப்பு நிறத்தில் மாடர்ன் உடை அணிந்து மிக அழகாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த மீனா, தனது மீன் கண்கள் அகல விரிய பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசினார்.

ரஜினி அங்கிள் நான் இங்கே இருக்கேன்..இங்கே இங்கே என்று கண்ணாமூச்சு விளையாட்டு காட்டிய மீனா, இன்று நைனிகாவின் அம்மாவாக கோடீஸ்வரி ஹாட் சீட்டில் உட்கார்ந்து பேசியதை பார்க்கையில்... வியப்பாக இருந்தாலும், ரசிக்கும்படி இருந்தது.

 ரஜினி அங்கிள்னு கூப்பிட்டீங்களா?

ரஜினி அங்கிள்னு கூப்பிட்டீங்களா?

மீனாவிடம், பேபியா ரஜினி சார் கூட நடிச்சீங்க. அப்போ அவரை அங்கிள்னு கூப்பிட்டீங்க. வளர்ந்து எஜமான் படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சீங்க. அப்போ ரஜினி சாரை அங்கிள்னு கூப்பிட்டீங்களா, இல்லை எப்படி கூப்பிட்டீங்க என்று கேட்டார் ராதிகா. சார் .. வெறும் சார்னுதான் கூப்பிட்டேன். உண்மையா முதலில் எப்படி கூப்பிடறதுன்னே தெரியாம முழிச்சுக்கிட்டுத்தான் இருந்தேன்.முதல் ஷெட்யூல் முழுக்க முழுக்க அவர் கூட நான் பேசவே இல்லை. ஒரு குட்மார்னிங், குட்நைட் கூட சொல்ல மாட்டேன். ரஜினி சார் அம்மாகிட்டே வந்து உட்கார்ந்து என்னங்க இது.. எனக்கே என்னவோ மாதிரி இருக்குங்க என்று சொன்னார்.

 ஜாலி கலாட்டா ரொம்ப

ஜாலி கலாட்டா ரொம்ப

அதுக்குப் பிறகு ரஜினி சார் நான் அழ அழ என்னை ரொம்ப கலாட்டா பண்ணி இருக்கார். ரொம்ப ஜாலியா இருப்பார் என்று மீனா சொன்னார். எல்லாரையும் அழ வைக்கற ரஜினியை நான் அழ அழ கலாட்டா பண்ணுவேன். போக்கிரிராஜா படம் நடிக்கும்போது நான், ஸ்ரீதேவி,ரஜினி சார் நடிக்கும்போது சில நாட்கள் நைட் 2 மணிக்கு கூட வீட்டுக்குப் போக வேண்டிவரும். அப்போது யார் முதல்ல வீட்டுக்கு போறாங்கன்னு கார் ரேஸ்லாம் வச்சுக்கிட்டு போவோம். நான் வம்பு இழுக்க கலாட்டா பண்ண கிட்டே போனாலே, வேணாம் ராதிகா இன்னிக்கு என்னை விட்ருன்னு கெஞ்சுவார். ஸ்ரீதேவியை ரொம்ப கலாட்டா பண்ணி அழ வச்சுருவார். அது அழ ஆரம்பிச்சுடும்.. ரொம்ப சுவீட்..ரொம்ப ஜாலி. அந்த ரஜினியை நான் மிஸ் பன்றேன்னு ராதிகா சொல்ல, நானும்தான் மிஸ் பன்றேன்னு மீனாவும் ராதிகாவுடன் சேர்ந்து சொன்னார்.

 முத்து பட டான்சிங் மகாராணி

முத்து பட டான்சிங் மகாராணி

முத்து திரைப்படத்துக்குப் பிறகுதான் ஜப்பானில் ரசிகர்கள் பெருகினாங்க. ரஜினி சாருக்கு டான்சிங் மஹாராஜான்னு பேர். எனக்கு டான்சிங் மஹாராணின்னு பட்ட பேர் வச்சாங்க என்று சொன்னார். சின்ன சின்ன ஆசை என்ன என்று கேட்டபோது, பீச் மணலில் விளையாடணும். கடல் அலைகளில்ஓடி ஓடி விளையாடணும்னு சொன்னார். சின்ன குழந்தையா இருந்தப்போ அம்மா என்னை மண்ணில் விளையாட விடலேன்னு சொன்னார்.நீங்க உங்க குழந்தையை விளையாட விடுவீங்களா என்று கேட்டபோது சிரித்தார்.

 நைனிகா தெறி பேபி

நைனிகா தெறி பேபி

நைனிகா வீட்டிலேயும் தெறி பேபிதான். இண்டஸ்ட்ரியே பார்த்து பயப்படற என் அம்மாவை ரொம்ப விரட்டுவா. அம்மா என்கிட்டே கெஞ்சுவாங்க.. இவளை என்கிட்டே தனியா விட்டுட்டு எங்கேயும் போகாதே...வெளியில் அவ கூட அனுப்பாதே.. மரியாதை இல்லாம விரட்டிப் பேசறா. அம்மம்மா நிக்காதே..கம் சிட் இப்படி எல்லாம் அதிகாரம் பண்ணும் என்று சொல்லி சிரித்தார்.படத்தில எப்படி நடிச்சுதுன்னே இன்னும் புரியலை. அட்லீ கிட்டே சொன்னேன்.. சரியா நடிக்கலேன்னா யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க. பேசாம வீட்டுக்கு அனுப்பிடுங்க. மீனாவோட குழந்தை சரியா நடிக்கலேன்னா பெரிய இஸ்யூவா நினைச்சு எழுதுவாங்கன்னு பயம் என்றும் சொன்னார்.

English summary
Actress Meena, who participated in the Kodeeswari show on Colors Tamil TV, shared many things with presenter Radhika Sarathkumar. It was then that Kalata Plus said she would miss the lively Rajini.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X