இந்த ராகத்தில் என்று முன்கூட்டியே திட்டமிடுவதில்லை...!
சென்னை: துள்ளலான இசைக்கு சொந்தகாரர் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையில் உருவான பாடல்களில் 99 சதவிகிதம் சூப்பர் ஹிட். ஃபிலிம் கம்பானியன் சவுத் என்கிற யூடியூப் சானலில் யுவனின் நேர்காணல் இந்த மாதம் 3ம் தேதியில் வெளியாகி இருக்கிறது.
யுவனின் வித்தியாசமான பதில்கள் கொண்ட நேர்காணலை கண்டு மகிழுங்கள். யுவனை பற்றிய நேர்காணலோடு அவரின் படலக்ளை பற்றியும் அசைபோடலாம்.எதாவது ஒரு விதத்தில் யாரையாவது முணுமுணுக்க வைத்துக்கொண்டே இருக்கும் யுவனின் பாடல்கள் கேட்க கேட்க இனிமை! காதலர்களை மகிழ்விக்க இவரது குரலில் வந்த காதல் பாடல்கள் ஏராளம்..
காதல் ஆசை யாரை விட்டதோ...என்கிற அஞ்சான் படத்தின் பாடல்...இறகைப் போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே... என்கிற நான் மகான் அல்ல படத்தின் பாடல் என்று எத்தனை எத்தனை காதல் பாடல்களை தனது வித்தியாசமான குரலில் பாடி இருக்கிறார் யுவன்.

தலைமுறை இல்லையே
ஆரம்பத்தில் இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி அடுத்து இசை ஞானி இளையராஜா.. அவருக்குப் பிறகு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தலைமுறையை பிரிக்க முடிந்தது. ஆனால், உங்கள் வருகைக்குப் பிறகு அப்படி பிரிக்கப்படவில்லையே ஏன் என்று கேட்ட போது, தெரியலையே என்று சிம்பிளாக முடித்துவிட்டார் யுவன்.

பாடல்... ராகம்... திட்டமிடல்
ஒரு படத்துக்கு பாடல் இசை அமைக்க.. இந்த பாடலில் இந்த ராகம் இசை அமைக்க வேண்டும் என்கிற திட்டமிடல் இருக்குமா என்கிற கேள்விக்கு, எனக்கு தெரிஞ்சு அப்படி யாரும் செய்வதில்லை என்றுதான் நினைக்கிறேன். நானும் கூட காலையில் எழுந்தவுடன் இசை அமைக்க உட்காரும் போது ஃபிரஷ் மைண்டில் என்ன ராகத்தில் பாடல் அமைகிறதோ அப்படித்தான் இசை அமைக்கிறேன் என்று கூறினார்.

எமோஷன்ஸ் முக்கியம்
பாடகர்கள் வைத்து ஒரு பாடலை பாடி ரெக்கார்ட் செய்யும்போது வார்த்தைக்கான எமோஷன்ஸ் கரெக்ட்டாக வந்து விழுந்து பொருந்தி இருக்கிறதா என்றுதான் கவனிப்பேன். ராகம், தாளத்தில் நன்றாக பொருந்தி இருக்கிறதா என்பது கூட எனக்கு முக்கியம் இல்லை என்று கூறி இருக்கிறார்.

ரவுடி பேபி
இசை அமைப்பதில் யுவனுக்கு என்று ஒரு தனி முத்திரை இருக்கிறது. இது அவரது பாடல்களை ரசிக்கும் ரசிகர்களுக்குத் தெரியும். அண்மையில் உலக அளவில் பெரும்பான்மையானவர்களால் ரசித்து பார்க்கப்பட்ட ரவுடி பேபி பாடல் யூடியூபில் பெரும் டிரண்டானது. இந்த பாடல் மாரி படத்தின் பாடல்.. இதில் தனுஷ், சாய் பல்லவி நடனம் ஆடி இருப்பார்கள்.

என்ன பார்ப்பது
கோவிட் 19 தொற்று லாக்டவுன் காலத்தில் என்ன பார்ப்பது, எதை பார்ப்பது என்று பொழுது போகாமல் இருப்பரவர்களுக்கு இந்த மாதிரி யூடியூப் சானல்கள் பார்த்து பொழுதை கழிக்கவும்... ஆர்வமான சில விஷயங்கள் குறித்து அறிந்துக்கொள்ளவும் இந்த தகவல்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications