கல்யாணத்தை கடைசி நேரத்துல நிறுத்துங்கம்பாய்ங்களே அது மாதிரி... முருகதாஸ்
சென்னை: கல்யாணத்தை கடைசி நேரத்துல வந்து நிறுத்துங்கனு சொல்வாங்களே அது மாதிரி தர்பார் படத்தை சொல்லிடுவாங்களோன்னு பயம் இருந்துச்சு என்று இயக்குநர் முருகதாஸ் சொன்னார்.
சன் டிவியின் தர்பார் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குநர் முருகதாஸ் தன்னுடைய தர்பார் படம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று என்று கூறினார்.
நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் அனிருத், நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்களும் கலந்துக்கொண்டனர்.

அண்ணாமலை இசை
ரஜினி சாருக்கு அண்ணாமலை படத்தின் தலைவர் இன்ட்ரோ இசை போல தர்பார் படத்துக்கும் தேவாவை வைத்து இசை அமைத்த அனுபவத்தை அனிருத் பகிர்ந்துக்கொண்டார்.சூப்பர் ஸ்டார் டிரேட் மார்க் இசை என்றால் அதுதான் என்றும் சொன்னார். அதாவது ரஜினி நடந்து வரும்போது ஒலிக்கும் பின்னணி இசையும் ஹோய் ஹோய் என்ற சத்தமுமான புத்தம் புது எனர்ஜி பாய்ச்சும் அந்த இசையை தர்பார் படத்திலும் தேவா இசை அமைத்துள்ளார்.

நாம் ரஜினி சார் படமா
நாம் ரஜினி சார் படம் எல்லாம் எங்கே இயக்கப் போகிறோம் என்று காலத்தை கழித்த நேரத்தில் எதிர்பாராத விதமாக வாய்ப்பு கிடைச்சுது. இந்த வாய்ப்பும் ஷூட்டிங் வரைக்கும் கனவுதான்.. கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்கிற பயத்துடனே இருந்ததாக முருகதாஸ் கூறினார்.

முதல் ஷாட்
முதல் ஷாட் சென்டிமென்டா டேக் எடுக்க கூடாது. ஒரே டேக்கில் எடுத்துடனும்னு தீர்மானிச்சோம். அதன் படி ரஜினி சார் நடக்கணும் அவ்ளோதான். அதுவரைக்கும் இந்த படத்த்தை ஷூட் செய்வோமா என்கிற சந்தேகம்தான் இருந்துச்சு. கல்யாணத்துல எப்படி தாலி கட்டும் நேரத்துல நிறுத்துங்கன்னு சொல்வாங்களே அது போல சொல்லிடுவாங்களோன்னு பயமா இருந்துச்சு என்று சினிமா பாணியிலேயே தனது பயத்தையும் கூறினார் முருகதாஸ்.

சூப்பர் ஸ்டார்னா
சூப்பர் ஸ்டார்னா அவர் ஒருத்தர்தான் இருக்க முடியும்.. நிஜமா அப்படித்தான் அவர் என்று தனது வியப்பை சொன்னார் நிவேதா தாமஸ். தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக இவர் நடித்து இருக்கார் தர்பார் படம் கமிட் ஆகறத்துக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் என் மேனேஜர்கிட்ட நான் சொல்லி இருந்தேன். ரஜினி சாரை சந்திக்க ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைங்கன்னு.
அவரை பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது. ஆனா, அதுக்கப்பறம் ரெண்டு மாசத்துல சார்கிட்ட இருந்து தர்பார் படத்துல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. எனக்கு ரொம்ப மகிழ்ச்சி என்று சொன்னனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications