Chithi 2 Serial: சித்தி 2 சீரியலில் நான் வருவேன்... கண்ணின் மணி பாடல் உண்டு.. ராதிகா
சென்னை: சன் டிவியின் சன் குடும்ப விருதுகள் முன்னோட்டம் ஞாயிறு அன்று ஒளிபரப்பானது.
அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ராதிகா சித்தி 2 வில் கண்டிப்பாக நான் வருவேன்.. கண்ணின் மணி பாலும் உண்டு என்று கூறினார்.
சித்தி 2 எப்போது வரும்,. அதில் ராதிகா நடிப்பாரா என்று பலரும் ஆவலாக கேட்டு வரும் நேரத்தில் அவரின் இந்த பதில் பலருக்கும் மகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.

சித்தி சூப்பர் ஹிட்
மெகா சீரியல் வரிசையில் சித்தி சீரியல் சூப்பர் ஹிட் சீரியல் என்று சொல்லலாம். அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த முதல் சீரியல். ராதிகாவுக்கு கிழக்கே போகும் ரயிலுக்குப் பிறகு மக்கள் மீண்டும் அதே இடத்தை வழங்கி மகிழ்ந்தார்கள்.

சீரியல்கள்
சித்திக்குப் பிறகு அண்ணாமலை, செல்வி, செல்லமே, வாணி ராணி என்று ராதிகா சரத்குமார் சன் டிவிக்கு சீரியல்கள் வழங்கி வந்த நேரத்தில் ஞாயிறுகளில் சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற சீரியல்களை வழங்கி வந்தார்.

கோடீஸ்வரன்
தங்கவேட்டை கோடீஸ்வரன் போன்ற நிகழ்ச்சிகளையும் ராதிகா சரத்குமாரின் ரடான் டிவி வழங்கி வந்தது. அவ்வப்போது சில சிறப்பு நிகழ்ச்சிகளையும் சன் டிவிக்கு ரடான் டிவிதான் தொகுத்து வழங்கி வந்தது. இப்படி ராதிகா சரத்குமார் இல்லாமல் சன் டிவி இல்லை, சன் டிவி இல்லாமல் ராதிகா சரத்குமார் இல்லை என்றான நிலையில்...

சந்திரகுமாரி
ராதிகா சரத்குமாரின் சந்திரகுமாரி சீரியல் எதிர்பார்த்த அளவில் வெற்றியாக அமையவில்லை. சன் டிவி கொஞ்சமும் எதிர்பாராமல் சந்திரகுமாரி ஒளிபரப்பு நேரத்தை ராதிகா சரத்குமாரின் வழக்கமான 9:30 மணி நேரத்தில் இருந்து 6:30 மணி நேரத்துக்கு ஒரே அடியாகத் தூக்கி அடித்தது.

காணாமல் போனார்
நொந்து போன ராதிகா சரத்குமார் கதைப்படி சீரியலில் காணாமல் போனார். திரும்ப சீரியலில் கிடைத்தபோது இவருக்கு பதில் இவர் என்று ராதிகாவுக்கு பதில் சந்திரவாக நடிகை விஜி நடித்தார். சீரியலை விரைவில் முடித்து, ராதிகாவின் சீரியலும் அத்தோடு முடிந்து போனது. இப்போது சித்தி 2 மூலம் ராதிகா வருவதாக அறிவித்து இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications