Actor Murali: நடிகர் "இதயம்" முரளியின் ராசியோ ராசி! அவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்...!
சென்னை: நடிகர் முரளி மட்டும் தற்போது உயிருடன் இருந்திருந்தால் ஏராளமான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருப்பார். இவர் இதுவரை 100 படங்களில் நடித்திருந்தாலும் திரையுலகுக்கு நிறைய இயக்குநர்களை கொண்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: முரளி என்கிற நடிகர் நடித்து 'பூவிலங்கு' வந்த போது முரளியை எல்லோருக்கும் பிடித்துப்போனது. காரணம் கவரது இயல்பான நடிப்பு. இயல்பு என்றால் வாழ்க்கையின் வாசலுக்கு அருகிலே நிற்பது.
பூவிலங்கு படத்தில் எம்.எல்.ஏ மகன் என்கிற ஆணவத்துடன் அவர் திமிராக நடப்பதும் பின் காதலில் விழுந்து தந்தைக்கு எதிராக மாறுவதிலும் அவரிடம் உண்மைத்தன்மை இருந்தது. தன் தந்தையோடு உதவி இயக்குனராக இருந்து அவர் கற்ற பாடம் அந்த அழகான நடிப்புக்கு உதவி இருக்கலாம்.
ஆனந்தம் படத்திலேயே பாருங்கள். சகோதரர்கள் எல்லோரும் கொஞ்சம் சினிமாட்டிக்காக இருப்பார்கள். முரளி கேரக்டர் மட்டும் உண்மையாக இருக்கும். மளிகைக்கடையில் வேலை செய்து மளிகைக் கடை வாடையுடன், பழைய மளிகைக்கடை விளம்பர பனியனை அணிந்து கொண்டு அண்ணன் சொல் பேச்சு மீறாத தம்பி. பின் மனைவி பேச்சை கேட்டு தனியாக கடை வைப்பது என முரளி மனித வாழ்க்கையின் நிகழ்வுகளை அழகாக பிரதிபலித்திருப்பார்.
புதுவசந்தம் படத்தில் நான்கு பேர் நடித்திருந்தாலும் முரளி ஒருவர் மட்டும் நடிப்பில் நம்மை கரையச் செய்வார்.
பாலம் படத்தில் இந்த அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் கோபக்கார இளைஞனாக அவர் தமிழ் சினிமாவில் செய்த ரீ-என்ட்ரி மகத்தானது. பாலம் மாதிரியான ஒரு படம் அன்றைய புதுமுக இயக்குனரின் அட்டகாசமான முயற்சி.
இதயம் படத்தில் காதலை கடைசி வரை சொல்லாமல் அவர் தவிக்கும் போது படம் முழுக்க நாமும் தவித்துப் போய் விடுவோம். அந்தக் காதல்கள் இன்று இல்லை. அதர்மம் படத்தில் வீரப்பனின் தம்பியாக அவர் வந்த போது அந்த கிராமத்து கேரக்டருக்கு முரளி நன்றாக பொருந்தி இருந்தார்.
முரளிக்கு தொடக்கம் முதலே ஒரு ஆச்சர்ய நிகழ்வு தமிழ்சினிமாவில் நிகழ்ந்தது. அது முரளிக்காக டியூன் கம்போஸ் செய்து இளையராஜாவே பாடியது.
ராஜா பின்னணிப் பாடிய நடிகர்கள் என லிஸ்ட் போட்டால் அதில் முரளி முதலில் நிற்பார். 'ஆத்தாடி பாவாட காத்தாட(பூவிலங்கு)', 'ஒரு ஜீவன் அழைத்தது'(கீதாஞ்சலி), 'பூமாலையே தோள் சேரவா?(பகல் நிலவு)', மாதுளங்கனியே (சாமி போட்ட. முடிச்சு), பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா(இதயம்), 'என் பாட்டு என் பாட்டு'(பூமணி) என பெரிய லிஸ்ட்டே போடலாம்.
ராஜாவின் பாடல் உணர்வுகளை தன் முகத்தில் அழகாக பிரதிபலித்து நடித்த நடிகர்களில் முரளி முதலில் வருவார். பூந்தோட்டம் படத்தில் ஒரு பாடல் மிக அழகு. 'வானத்தில் இருந்து குதிச்சி வந்தேனா?' நல்ல ராஜாபாடல். நடிகர் முரளி மறைந்தது ரசிகர்களுக்கு பெரிய இழப்பு என்பதை விட தமிழ்த்திரையுலகுக்கே பெரிய இழப்பு என்று தான் சொல்ல வேண்டும்.
முரளியின் காலங்களில் கூட இருந்த மோகன், பிரபு, கார்த்திக் இவர்களை விட முரளி அதிக சம்பளம் வாங்கவில்லையென்றாலும் ஒரு விஷயத்தில் முரளி தான் நம்பர் ஒன்.
எந்த இணை, துணை இயக்குனரும் நேரடியாக சென்று கதை சொல்லி இயக்குனராக ப்ரமோஷன் பெற வேண்டுமானால் முரளி வீட்டு கதவை தட்டலாம். அப்படி அவர் வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் ஏராளம். இதனால் வேறு வேறு பார்வையுடைய திரைப்படங்கள் வரத்தொடங்கியது அப்போது.
இன்று எல்லா நடிகர்களும் வெற்றி பெற்றவரின் பின்னால் தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். முரளி இருந்திருந்தால் நிறைய இயக்குனர்கள் வந்திருக்கலாம்.
தன் சொந்த தந்தை சித்தராமலிங்கையாவையே தமிழில் அறிமுகப்படுத்திய சிறப்பு முரளிக்கு உண்டு.
பூவிலங்கு - அமீர்ஜான்
பகல்நிலவு - மணிரத்னம்
மனோஜ்குமார் - மண்ணுக்குள் வைரம்
வளையல் சத்தம் - ஜீவபாலன்
மீண்டும் மகான் - உத்தமன்
நினைவு சின்னம் - அனுமோகன்
புதுவசந்தம் - விக்ரமன்
பாலம் - கார்வண்ணன்
சிலம்பு - நேதாஜி
நானும் இந்த ஊரு தான் - சேகர் ராஜா
நம்மஊரு பூவாத்தா - மணிவாசகம்
இரவு சூரியன் - நாதன்
பூமணி - களஞ்சியம்
காலமெல்லாம் காதல் வாழ்க - பாலு
ரோஜாமலரே - ஜெயமுருகன்
மனுநீதி - தம்பி ராமையா
ஆனந்தம் - லிங்குசாமி
பாணா காத்தாடி - பத்ரி வெங்கடேஷ்
இதயம் - கதிர்
தினந்தோறும் - நாகராஜ்
சுந்தரா டிராவல்ஸ் - தாஹா.
கனவே கலையாதே - கௌதமன்.
அதர்மம் - ரமேஷ்
எங்கராசி நல்ல ராசி - ரவி-ராஜா
அறிவு மணி - எம்.ஏ.கென்னடி
காமராசு - பி.சி.அன்பழகன்
அள்ளி தந்த வானம் - அருண்பிரசாத்
கண்ணுக்கு கண்ணாக - தயாளன்
ஊட்டி -அன்வர்
ரத்னா - இளஞ்செழியன்
மஞ்சுவிரட்டு - வளையாபதி
மணிக்குயில் - ராஜவர்மன்
அவள் மெல்ல சிரித்தாள் - ஜெய்சுந்தர்
சிறையில் சில ராகங்கள் - ராஜேந்திரகுமார்
நாங்கள் புதியவர்கள் - இளங்கோவன்
100 படங்கள் நடித்தாலும் பல டைரக்டர்களை திரையுலகுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
அவருக்கு அப்படி ஒரு ராசி இருந்தது. முரளி இன்னும் வாழ்ந்திருக்கலாம்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications