Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப்டம்பர் 22, 1996 இல் சில்க் ஸ்மிதா வீட்டிற்கு நடிகை அனுராதா சென்றிருந்தால்..? எல்லாம் விதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சில்க் ஸ்மிதா அன்று இரவு போன் செய்த போது நடிகை அனுராதா உடனே சென்றிருந்தால், இன்று சில்க்கை நாம் இழந்திருக்க மாட்டோம். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: எடுக்காத போன்கால்கள் சில வாழ்வுகளை முடித்துவிடும். சொல்லாத பாராட்டுக்கள் சிலர் துயருக்குள் கொண்டு விடும்.

television silk smitha anuradha

நடக்காத சந்திப்புகள் நட்புகளையே பிரித்துவிடும்.. நடிகர் சுஷாந்த் இறக்கும் முன் பிரியப்பட்ட யாருக்கோ போன் செய்திருக்கிறார். நண்பனோ அல்லது காதலியோ... அந்த போனை எடுத்து பேசி இருந்தால் ஒரு வேளை சுஷாந்த் இன்று உயிருடன் இருந்திருக்கலாம்.

சில்க் ஸ்மிதா நடிகையாக வளர்ந்த காலத்தில் அவருக்கு போட்டியாக இறங்கியவர் அனுராதா. அனுராதாவுக்கும், சில்க்குக்கும் ஆகவே கூடாதென கங்கணம் கட்டி பரப்பப்பட்ட வதந்திகளால் சில்க் அனுராதாவோடு பேசுவதேயில்லை.

ஒரு காலகட்டத்தில் சில்க்கின் சொந்தப் படத்தில் அனுராதா நடிக்க சென்றபோது இருவரும் நட்பாகி தோழிகளாகினர். வாடி, போடி என அழைக்கும் நட்பாகி மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தனர்.
ஒரு நாள் இரவு சில்க், அனுராதாவை போனில் அழைத்து உடனே சந்திக்க வேண்டும் என சொல்ல அனுராதாவோ இப்போது தான் ஊரிலிருந்து வந்திருக்கிறேன்.

நாளை காலை சந்திப்போம் என சொல்ல.. மறுநாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பிறகு சில்க்கை சந்திக்க முடிவெடுத்து பிள்ளைகளை தயார் படுத்தும்போது டிவியில் சில்க் தற்கொலை செய்தி...

ஒரு வேளை அனுராதா பேசி இருந்தால் அது நிகழாமல் இருந்திருக்கலாமோ?
எந்த அழைப்பையும் எடுங்கள். எவரையும் புறக்கணிக்காதீர்கள்... புறக்கணிப்பு ஒரு பெரிய கொடுமை. அதை பல விதத்தில் பெற்ற அனுபவம் பலருக்கும் இருக்கும்...
நான் வெளிநாட்டிலிருந்து யாருக்கும் போன் செய்வதில்லை. பேசினால் எல்லோரும் ஏதோ அவசர வேலை இருப்பது போல்.. அப்படியா.. சௌக்கியமா... வச்சிடவா என உடனே வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

அதோடு போன் அழைப்பையே விட்டு விட்டேன்.... நடைபெறாத சந்திப்புகள் துயரங்களை தந்து விடலாம்... புறக்கணிப்புகள் ஏக்கங்களை தந்துவிடலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை அனுராதாவே பல தருணங்களில் தெரிவித்துள்ளார். அன்று இரவு கணவர் சதீஷ் ஊரில் இல்லை என்பதால், சில்க் அழைக்கும் போது குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்ல முடியாது என்பதால் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வருவதாக சில்க்கிடம் அனுராதா தெரிவித்திருந்தாராம்.

ஆனால் அடுத்த நாள் இப்படியொரு பொழுதாக விடியும் என அனுராதா நிச்சயம் நினைத்திருக்க மாட்டார். இன்று வரை அவர் அதற்காக வருந்துகிறார். ஒரு வேளை அன்று இரவே தான் சில்க்கை சந்தித்திருந்தால் சில்க்கின் தற்கொலை சம்பவமே நடந்திருக்காது என்று பல முறை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இதுதான் விதி என்பது!

சில்க் ஸ்மிதா, கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தனது 35 வயதில் தற்கொலை செய்து கொண்டார். தனது 18 வயதிலேயே 450 படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் 1979 இல் "வண்டி சக்கரம்" என்ற படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் சில்க் ஸ்மிதா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். சில்க் கடித்த ஆப்பிள் ஒரு லட்சத்திற்கு ஏலம் போனதாக தகவல்கள் எல்லாம் உண்டு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+