Azhagu Serial: பூர்ணா திருந்திட்டா கதையே இல்லையே... என்ன பண்ணுவாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் பூர்ணா கதாபாத்திரம் அதிக அடாவடிகள் செய்துக்கொண்டு இருந்தவள், இப்போது திருந்திவிட்டதாக காண்பிக்கிறார்கள். பூர்ணா செய்த அடாவடித்தனம் மட்டும்தான் இதுவரையான கதையாக சீரியல் சென்றுகொண்டு இருந்தது.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக அழகு சீரியல், சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தாலும், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலான கதை என்னவோ பூர்ணா வில்லியாக இருந்து செய்த அக்கிரமம், அடாவடித்தனங்கள்தான்.

இப்போது பூர்ணா திருந்திவிட்டதாக சீரியலில் காண்பிக்கிறார்கள். ஒருவேளை சீரியல் முடிந்துவிடுமோ என்கிற எண்ணமும் எழுந்துள்ளது. இல்லாவிட்டால் எதை காண்பித்து கதையை கொண்டு செல்வார்கள் என்கிற ஆர்வத்திலும் மக்கள் கணிப்பு இருந்து வருகிறது.

 தினம் எபிசோடில் ரேவதி

தினம் எபிசோடில் ரேவதி

நடிகை ரேவதி அழகு சீரியலில் நடிக்கிறார் என்றுதான் பெயர். அவர் வருவது என்னவோ பல எபிசோட்கள் கடந்து ஒரு சில எபிசோட் என்றுதான் காட்சி தருவார். முக்கிய காட்சிகளில் ரேவதி இல்லாமலே அட்ஜஸ்ட் செய்து காட்சிகளை எடுத்து விடுவார்கள். இது பலருக்கும் குறையாக இருந்தாலும், சுட்டி காட்டினாலும் அடிக்கடி அப்படித்தான் நிகழும். சீரியல் எடுப்பவர்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த ஆம்திரி ரேவதியை நடிக்க வைப்பார்கள் போலும். இப்போதைய காலக்கட்டங்களில் தினமும் ரேவதி வருகிறார்.

 காயத்ரி ஜெயராம்

காயத்ரி ஜெயராம்

இதில் முக்கிய வேடத்தில் அதாவது தி கிரேட் லாயர் சகுந்தலா தேவியாக நடிக்கும் நடிகை காயத்ரி ஜெயராம்,தான் இருக்க வேண்டிய காட்சிகளில் வந்து கச்சிதமாக நடித்துக் கொடுத்துவிடுவார். இந்த சீரியலில் மிகவும் நன்றாக நடித்தும் வருகிறார். பலரின் பாராட்டுதல்களோடு வக்கீல் சகுந்தலா தேவியாக ,அதே சமயம் பூர்ணாவின் அம்மாவாக என்று தாய்ப்பாசத்தை கொட்டி நன்றாக நடித்து வருகிறார்.

 வில்லி அழகு சங்கீதா

வில்லி அழகு சங்கீதா

அழகு சீரியலில் வில்லியாக நடிச்சு இருக்கும் சங்கீதாவை பார்க்கும் இடத்தில் எல்லாரும் திட்டுகிறார்களாம்.கூடிய விரைவில் என் கேரக்டர் பாசிட்டிவாக மாறும் என்றும் சொல்லி வரும் சங்கீதா சொன்னபடியே கேரக்டர் பாசிட்டிவ்வாக மாறி வருகிறதா. இல்லை மீண்டும் நல்லவர் போல சீரியலில் நடித்து பின்னர் வில்லத்தனம் செய்வாரோ என்கிற சந்தேகமும் சீரியல் பார்க்கும் பலருக்கும் இருக்கிறது. சங்கீதா இந்த சீரியலில் வில்லியாக நடித்து சிறந்த வில்லி என்று சன் குடும்ப விருதும் வாங்கி இருக்கிறார்.

 சீரியலில் சுவாரஸ்யம்

சீரியலில் சுவாரஸ்யம்

பூர்ணா திருந்திவிட்டால் அடுத்து நடக்கப் போகும் கதை சுவாரஸ்யம் குறைந்து போகுமா. இல்லை கதையை அதன் ரேட்டிங்குக்கு தக்க திசை மாற்றி வேறு கதையை புகுத்தி டர்னிங் பாயிண்ட்ஸாக கொண்டு வருவார்களோ என்றும் பலரும் பேசி வருகிறார்கள். எது எப்படியானாலும் கடந்த சில எபிசோட்ஸில் ரேவதி தொடர்ந்து தலையை காண்பித்து வருகிறார் என்று சீரியலை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள் சீரியல் விரும்பிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+