இளையராஜாவுக்கு வேலை வெட்டி இல்ல..! அதனாலதான் இப்படி பண்ணிட்டு இருக்காரு.. ஷகீலா ஆதங்கம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்த "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" திரைப்படத்தில் இளையராஜாவின் இசை பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் நடிகை வனிதாவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஷகிலா இளையராஜா மீது தனக்கு இருக்கும் கோபத்தை பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து நடிகை ஷகீலா சமீபத்திய பேட்டியில் இளையராஜா பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். "இளையராஜாவுக்கு தற்போது அதிக வேலைகள் இல்லை என்றும், அவர் எத்தனை திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார் என்பது தெரியவில்லை" என்றும் ஷகீலா கூறியுள்ளார்.

ஷகிலா பேட்டி
ஷகிலா மேலும் கூறுகையில், "இளையராஜா ஒரு வாழும் இசை மேதை. அவரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஒரு படத்திற்கு இசையமைத்து அதற்கான பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு, அந்தப் பாடலின் உரிமையை தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எப்படித் திரும்பப் பெற முடியும்? இது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. நான் சிறு வயதிலிருந்தே அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஆதங்கம்
மேலும், "அவருக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். யாராவது அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் அதில் கவனம் செலுத்துவார். இந்த வயதில் அவர் தனது மரியாதையை தானே கெடுத்துக் கொள்கிறார்" என்று ஷகீலா காட்டமாக விமர்சித்துள்ளார்.
வனிதா வருத்தம்
மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் "ராத்திரி சிவராத்திரி" என்ற பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடர்ந்தபோது வனிதாவும் தன்னுடைய கோபத்தை தெரிவித்து இருந்தார். அதில் நான் இளையராஜாவிடம் நேரில் சென்று ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அவரிடம் அனுமதி வாங்கி தான் இந்த பாடலை பயன்படுத்தினேன், இந்த பாடலின் உரிமையை வைத்திருக்கும் சோனி நிறுவனத்திடமும் உரிமை வாங்கி விட்டேன். ஆனால் வேணும்னே இப்போது என் மீது வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.
வனிதா பேட்டி
குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்கிறது அந்த பிரச்சனையை தாண்டி நான் இளையராஜாவை சந்தித்து அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருந்தேன். அவரை சந்திக்கப் போகும்போது கிப்ட் எல்லாம் வாங்கிட்டு போனேன் ஆனால் அவர் இப்படி செய்வார்னு நான் நினைக்கவே இல்லை என்று கண்ணீரோடு பேசி இருந்தார். அதோடு நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக போயிருக்க வேண்டியவள் என்று வனிதா பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் இப்போது திரையரங்குகளை விட்டு வெளியே வந்திருக்கும் நிலையில் இளையராஜா பற்றி ஷகிலா பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
"நான்கு” தலைமுறையாக மாஸ் காட்டும் "இசைஞானி..” இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த 10 ஆச்சரிய சம்பவங்கள்! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications