இளையராஜாவை பிறந்தநாளில் சந்தித்த மாரி செல்வராஜ் உருக்கம்.. சிஎம் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில்
சென்னை: இசைஞானி இளையராஜா தனது 83வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க திரையுலக பிரபலங்கள் பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சென்று இளையராஜாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இளையராஜா மீதான தனது அன்பையும், அவருடன் இணைந்து பணியாற்றும் கனவு எப்படி நனவானது என்பதையும் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துகொண்டார்.

மாரி செல்வராஜ் பேட்டி
செய்தியாளர்களிடம் பேசிய மாரி செல்வராஜ், "நான் தற்போது என்னுடைய ஆறாவது படத்தை இயக்குகிறேன். 'வாழை' படத்தின் இன்னொரு பகுதியாக 'மஞ்சனத்தி' இருக்கும். அந்த கதையை எழுதும்போதே ராஜா சாரை நினைத்துதான் எழுதினேன். அவர்மீது எனக்கு தீராத காதல் இருக்கிறது. அந்த காதல்தான் என்னை இந்த இடம் வரை கொண்டு வந்திருக்கிறது" என்று கூறினார்.
அவரது இந்த வார்த்தைகள், இளையராஜாவை ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், ஒரு பெரிய கலைஞராகவும், தன்னை ஊக்கப்படுத்திய சக்தியாகவும் அவர் பார்க்கிறார் என்பதே தெரிகிறது.
சின்ன வயதிலிருந்தே கனவு
தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், "நான் சிறுவயதிலிருந்தே ராஜா சாரின் இசையை கேட்டு வளர்ந்திருக்கிறேன். அவருடைய பாடல்களும் பின்னணி இசைகளும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் அவருடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும் என்பது என்னைப் போன்ற பலருக்கும் இருக்கும் கனவு. அந்த ஆசை எனக்கும் இருந்தது" என்றார்.
மேலும், "ஆனால் அந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால் அதற்கு முன்பு நாமும் ஒரு அளவிற்கு தகுதி பெற வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக உழைத்தேன். இன்று ஓரளவிற்கு அந்த நிலைக்கு வந்த பிறகு அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும், பெருமையும்" என்று கூறினார்.
இளையராஜா ஸ்டூடியோவில் அனுமதி
இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குள் பொதுவாக இயக்குநர்கள் உள்ளிட்ட பலருக்கும் எளிதில் அனுமதி கிடைப்பதில்லை என்ற பேச்சு நீண்ட காலமாக திரையுலகில் இருந்து வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள், "பொதுவாக ராஜா சார் ஸ்டூடியோவுக்குள் யாரையும் அவ்வளவு எளிதாக அனுமதிக்க மாட்டார் என்று சொல்வார்கள். உங்களுக்கு எப்படி அந்த வாய்ப்பு கிடைத்தது?" என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு சிரித்தபடியே பதிலளித்த மாரி செல்வராஜ், "எனக்கு நடந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று கூறி அந்த கேள்வியை மிக எளிமையாக கடந்து சென்றார்.
விஜய் ஆட்சி குறித்து கேள்வி
இதே சந்திப்பில், அரசியல் தொடர்பான கேள்வியும் எழுந்தது. "விஜய் ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆகிறது. அந்த ஆட்சி எப்படி இருக்கிறது?" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு மாரி செல்வராஜ், "நான் இப்போது இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்திருக்கிறேன். இந்த இடத்தில் அந்த விஷயம் தேவையில்லை. அது குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிக்கொள்ளலாம்" என்று மிகவும் நிதானமாக பதிலளித்து அரசியல் விவாதத்திற்குள் செல்லாமல் தவிர்த்தார்.
கனவு நனவான தருணம்
மாரி செல்வராஜ் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, "ராஜா சாரை நினைத்துதான் அந்த கதையை எழுதினேன்", "அவர்மீது எனக்கு தீராத காதல் இருக்கிறது" போன்ற அவரது வார்த்தைகள் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன.
ஒரு காலத்தில் இளையராஜாவின் பாடல்களை கேட்டு வளர்ந்த ஒரு ரசிகராக இருந்த மாரி செல்வராஜ், இன்று அதே இசைஞானியுடன் இணைந்து திரைப்படம் உருவாக்கும் நிலைக்கு வந்திருப்பது பல இளம் இயக்குநர்களுக்கும் ஒரு உத்வேகமாக பார்க்கப்படுகிறது. இளையராஜாவின் 83வது பிறந்தநாளில் வெளியான இந்த சந்திப்பு, ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications