Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரதிராஜாவுக்கு டிரைவர் ஆக இருந்த இளவரசு.. 3 நாள் கார் ஓட்டியதற்கு கொடுத்த சம்பளம், இப்படி ஒரு மனசா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் இளவரசு சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் பாரதிராஜா குறித்து பேசி இருக்கிறார். தான் "மண்வாசனை" திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் போது பாரதிராஜாவுக்கு மூன்று நாள் கார் ஓட்டியதாகவும் அதற்கு அவர் தனக்கு கொடுத்த சம்பளம் பற்றிய விவரத்தையும் அந்த பேட்டியில் இளவரசு பேசியிருக்கிறார். அது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

நடிகர் இளவரசு ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றி பெற்று இருக்கிறார். அவர் இயக்கிய திரைப்படங்கள் இப்போதும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதுபோல எதார்த்தமான நடிப்பை தன்னுடைய திரைப்படங்களில் காட்டி வரும் இளவரசு தொடர்ந்து குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகரும் இயக்குனருமான பாரதிராஜா பற்றி பேசி இருந்தார்.

Ilavarasu Bharathiraja

கார் டிரைவரான இளவரசு

அதாவது பாரதிராஜா இயக்கத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்ற மண்வாசனை திரைப்படத்தில் பாரதிராஜாவிடம் ஒளிப்பதிவாளராக கண்ணன் இருந்திருக்கிறார். அப்போது கண்ணனிடம் உதவி ஒளிபதிவாளராக இளவரசு வேலை செய்து இருக்கிறார். அப்போது பாரதிராஜாவுக்கு டிரைவர் இல்லாத சமயத்தில் இளவரசு தான் கார் ஓட்டி போனாராம். அப்போது மூன்று நாட்கள் தொடர்ந்து இளவரசு கார் ஓட்டி இருக்கிறார்.

பாரதிராஜாவின் பெருந்தன்மை

இதை கவனித்த பாரதிராஜா இளவரசுவை அவருடைய வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போனாராம். அவரிடம் 500 ரூபாய் பணம் கொடுத்து இதை வச்சுக்க உனக்கு எப்ப செலவுக்கு காசு வேணாலும் என்கிட்ட தயங்காம கேளு என்று சொன்னாராம். இதை என்னால் மறக்கவே முடியாது. காரணம் பாரதிராஜா கையில் இருந்து பணம் வாங்கியது எனக்கு அப்போது பெரிய பாக்கியமாக இருந்தது. இப்போது இருக்கிற மாதிரி அப்போ பணத்தின் மதிப்பு கிடையாது.

பாரதிராஜா கொடுத்த சம்பளம்

அப்போதெல்லாம் 500 ரூபாய் என்பது பெரிய விஷயம். அந்த பணத்தை என் கையில் அவர் மூன்று நாள் வண்டி ஓட்டுனதற்காக கொடுத்தார். அந்த சந்தோஷத்தில் நான் பாரதிராஜா வசித்த ஜெமினி மேம்பாலத்திலிருந்து, கோடம்பாக்கத்தில் இருக்கும் என்னுடைய வீடு வரைக்கும் நடந்தே போனேன் என்று சந்தோஷமாக இளவரசு பேசியிருக்கிறார்.

பாரதிராஜாவுக்கு ஏற்பட்ட சோகம்

பாரதிராஜாவின் மகன் மனோஜ் இறப்பிற்கு பிறகு பாரதிராஜா மிகவும் சோர்ந்து போகிறார். அவர் இன்னும் எந்த நிகழ்ச்சிகளிலும் தலை காட்டவில்லை. தன்னுடைய மகனின் நிலைமையை நினைத்து வருத்தத்தோடு இருக்கும் பாரதிராஜாவின் பெருந்தன்மையை பற்றி இளவரசு பேசி இருக்கும் நிலையில் இவருக்காக இப்படி ஒரு சோகமான நிலைமை ஏற்பட வேண்டும் என்று பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். தன்னுடைய மகன் 47 வயதில் உடல்நிலை குறைவால் காலமானதை தன் கண் முன்பு பார்த்த பாரதிராஜா வயதான காலத்தில் வாடி போய் இருக்கிறார். இந்த கஷ்டமான காலத்தை கடந்து பாரதிராஜா பழையபடி வர தொடங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+