நல்ல போட்டோ எடுக்கணும்.. கூப்பிடுங்க கார்த்திக்கை.. இசைஞானியின் ஒளி நாயகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ரொம்ப பிடிச்ச புகைப்பட கலைஞர் கார்த்திக் ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டார்.

கடந்த 11 வருஷமா ராஜா சாருக்கு, எந்த விழா, அல்லது தனிப்பட்ட போட்டோ ஷூட்ன்னு எதுனாலும் கூப்பிடுங்க கார்த்திக்கை அப்டின்னுதான் ராஜா சொல்வாராம்.

சேனல், மீடியாக்களுக்கு போட்டோ எடுத்துக்கிட்டு இருந்த இவரின் திறமை மற்றும் சுறுசுறுப்பை பார்த்துட்டு, தன்னை இருப்பது போல அப்படியே எடுத்திருப்பதைக் கண்ட இளையராஜா சார், அன்றிலிருந்து தன்னைத்தான் அழைப்பார்னு சொன்னார்.

 என் பேரும்

என் பேரும்

அதோட அவர் பையனின் பேரும் என் பேரும் கார்த்திக் என்பதால், டக்குன்னு அவருக்குள்ள நான் புகுந்துகிட்டேன்னு சொன்னார் கார்த்திக் ஸ்ரீநிவாசன்.

 கோட் சூட்

கோட் சூட்

வேஷ்டி சட்டையில் வேண்டாம், கோட் சூட் இப்படி சில உடைகள் மாத்தணும்னு சொன்னப்போ ஒண்ணுமே சொல்லாம மாத்திக்கிட்டு வந்தார். இளையராஜா 75 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில நல்ல புகைப்படங்கள் எடுக்கலேன்னு அவருக்கு வருத்தம்.

கடற்கரை

கடற்கரை

கிழக்கு கடற்கரையில் ஹங்கேரியிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், இங்கு வாசிச்ச கலைஞர்கள்னு எல்லாத்தையும் ஒரே இடத்துல வாசிக்க வச்சு விதம் விதமா படம் எடுக்க சொன்னார். கிழக்கு கடற்கரையில் ஹங்கேரியிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், இங்கு வாசிச்ச கலைஞர்கள்னு எல்லாத்தையும் ஒரே இடத்துல வாசிக்க வச்சு விதம் விதமா படம் எடுக்க சொன்னார்.

கடவுள்

கடவுள்

எனக்கு கடவுள் ஆசிர்வாதம் இருக்குன்னுதான் சொல்லணும். இல்லேன்னா ஹங்கேரி கலைஞர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 100 பேர் தனிப்பட்ட முறையில அதிகாலை நேரத்துல இளையராஜா சார் இசையை வாசிக்க, அதை புகைப்படம் எடுக்கும் நான் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவனா இருக்கணும்னு சொன்னார்.

 போட்டோ பிகர்

போட்டோ பிகர்

எந்த நடிகைக்கு போட்டோ ஃபேஸ் நல்லாருக்கும்னு கேட்ட கேள்விக்கு, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைங்க.. எனக்கு எப்படி அவங்க இருக்காங்களோ அப்படி அவங்களை போட்டோ எடுக்கறதுதான் பிடிக்கும். ஸ்கின் டோன் அப்படியே இருக்கணும் அதுதான் நல்ல போட்டோ கிராபருக்கு தேவையான குவாலிட்டின்னு நினைக்கறேன்னு சொன்னார்.

 அஜத்

அஜத்

ரஜினி சார் பாருங்க.. முன்னால வழுக்கை, கலரை பத்தி கவலைப்படறதில்லை.. அஜீத் சார் பெப்பர் சால்ட் தலையோட வெளியில வர்றார்.எப்பவுமே உண்மைதாங்க அழகு. அதை ஏத்துக்கத்தான் பழகணும். அவங்க நடத்தையிலதான் அழகு வெளிப்படும்ன்றதுதான் என் எண்ணம்னு அழகாக பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+