கலர்ஸ் தமிழ் டிவியில் கல்லா கட்டும் இமான் அண்ணாச்சி
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கல்லாப்பெட்டி நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி கல்லா காட்டுகிறாரா என்று பார்த்தால் ஓரளவுக்கு என்று தோன்றுகிறது.
நிகழ்ச்சி பெண்களுக்கான நிகழ்ச்சி மட்டும்தான் போல. ஊர் ஊராக சென்று சொல்லுங்கண்ணே சொல்லுங்க நடத்தியது போல வினாடி வினா போன்று நடத்தி வருகிறார்.
விதம் விதமான கெட்டப்... வழக்கமான தனது நகைச்சுவை பாணி என்று கல்லாப்பெட்டியை நன்றாகவே நடத்தி வருகிறார் அண்ணாச்சி.

கடையில் போட நினைக்கும்
நீங்கள் காயலாங் கடையில் போட நினைக்கும் மூன்று பொருட்கள் என்று ஒரு பெண்ணிடம் இமான் அண்ணாச்சி கேட்க. அந்த பெண் சக்கரம், இரும்பு, அலுமினியம் என்று கூறிவிட்டு, பெல்லை அடிக்கிறார். பின்னர் பதில் கூறுகிறார் . சக்கரம், இரும்பு அலுமினியம் என்று. அதாவது சைக்கிள் சக்கரம், இரும்பு, நசுங்கிய அலுமினிய பாத்திரமாம்.

நட்டு போல்ட்டு
அண்ணாச்சியிடம் இன்னும் நக்கல் போகவில்லை. என்னம்மா சக்கரையான்னு கேட்கறார். சக்கரம்.. அதாவது சைக்கிள் சக்கரம்..துரு பிடிச்சுட்டுது அதை போட்ருவேன்னு சொல்றாங்க அந்த பெண். சரி என்னமோ இரும்புன்னு சொன்னியே அது என்னன்னு கேட்கறார். நட்டு போல்ட்டுன்னு அந்த பெண் சொல்ல.. என்ன பழைய இரும்பு கடையா வச்சு இருக்கேன்னு கேட்க.. அப்புறம் இந்த கேள்வியை என்கிட்டே ஏன் கேட்டீங்க. அவங்ககிட்டேயே இந்த கேள்வியை கேட்டு இருக்க வேண்டியதுதானேனு கேட்க.. என்னம்மா டென்சன் ஆயிட்டே இனிமே இந்த கேள்வியை கேட்ட செவுல்களில் அடிப்பே போல இருக்கேன்னு சரண்டர் ஆயிட்டார்.

இன்னொரு பெண்ணிடம்
இருவர் இருக்கிறார்கள்.. இந்த நிகழ்ச்சி பாண்டிச்சேரியில் நடக்கிறது. இன்னொரு பெண்ணிடம் அண்ணாச்சி கேட்கிறார். வேலை செய்யாமல் ஓபி அடிப்பது எப்படி என்று.. அதற்கு இன்னொரு பெண் சொல்கிறார்... புள்ளைங்க கூட விளையாடுவேன்.. பேசிகிட்டு இருப்பேன். தூங்கிகிட்டே இருப்பேன்னு சொன்னார்.

ஓவர் டைம் பார்க்க
ஓவர் டைம் பார்க்க சொன்னா என்ன சொல்வீங்க என்று அண்ணாச்சி கேட்டபோது டென்சன் ஆவேன், எதிர்த்து கேட்பேன், கோபப்படுவேன்னு சொன்னார். அப்போது அண்ணாச்சியின் பேச்சு கொஞ்சம் எல்லை மீறியதாக இருந்தது. இங்க சுத்தி அங்க சுத்தி கலர்ஸ் தமிழ் டிவி போயி இருக்கீங்க அண்ணாச்சி. கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க அண்ணாச்சி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications