Independence day 73: ஹையா... இன்று டிவி சீரியல்களுக்கு பைபை.. ஆனால்...?
சென்னை: இன்று நாட்டின் 73 வது சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு, எப்போதும் போல பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களின் தேசிய கொடி ஏற்றும் வைபவம் இவர்களின் உரை நிகழ்த்துதல் என்று சிறப்பு விஷயங்கள் நடைப்பெற்று முடிந்து இருக்கிறது.
இன்று தொலைக் காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு, அன்றாடம் ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களுக்கு இன்று மட்டும் பைபை காண்பித்து இருக்கிறார்கள்.
பதிலாக டிவி சேனல்கள் சிறப்பு பட்டிமன்றம், சீரியல்கள் நடிகர் நடிகைகளை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் என்று குடும்பத்தினரை ஹாலில் நிரப்பி உட்கார வைத்துள்ளன. என்றாலும், சீரியல் நடிகர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் சற்று போராகத்தான் இருக்கிறது.

வெகு சிறப்பு
பட்டி மன்றம் என்று எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பி வருவது வெகு சிறப்பு என்று சொல்லலாம். திரும்ப திரும்ப சீரியலில் நடிக்கும் முகங்களையே பார்க்கும்படி அவர்களை வைத்து கேம் ஷோ என்கிற பெயரில் கேலிக்கூத்து நடத்துவது என்பது, முகம் சுளிக்கும்படி இருக்கிறது. ஒரு ஞாயிற்று கிழமை வர கூடாது, ஒரு சிறப்பு தினம் வர கூடாது...ஆ ஊன்னா உடனே எல்லா சேனல்களிலும் இந்த மாதிரி கேம் ஷோதான்.

சீரியல் ஜோடிகள்
சினிமா ஜோடிகளை வரவச்சு நேர்காணல் செய்வது என்பது வேறு, சீரியல் ஜோடிகளை வரவச்சு கேம் ஷோ செய்வது என்பது வேறு.அப்படி நீங்கள் இந்த ரீல் ஜோடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீரியல் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஷோ நடத்துவது என்பது அவர்களின் பர்சனல் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை மனதில் கொள்ளாமல் செயல்படுவது ஏனோ? இந்த அடிப்படை விஷயங்களை கூட எண்ணாமல் உங்கள் ரேட்டிங், உங்கள் வருவாய் என்பதை மட்டுமே வைத்து செயல்படுவது நியாயம் அல்ல.

வரும் பட்சத்தில்
இல்லை, அவர்களுக்கும் அன்றைய தினம் வருவாய் வருகிறது என்பதால்தான் ரீல் ஜோடிகளும் அழைத்தால் வருகிறார்கள் என்று நீங்கள் கூறினால், உங்களுக்கு ஓகே.எங்களுக்கு போரடிக்குதுங்க. முடிந்தால் சினிமா ஜோடிகளை வைத்து இந்த மாதிரி கேம் ஷோக்களை நடத்துங்களேன் பார்க்கலாம். நீங்கள் எதற்கும் மெனெக்கெட் மாட்டீர்கள், எங்கள் மீது எதைத் திணித்தாலும் நாங்கள் பார்க்க வேண்டுமா?

உருப்படி நிகழ்ச்சி
பட்டி மன்றம் தவிர எந்த சேனல்களிலும் எந்த சிறப்பு நிகழ்ச்சியும் சொல்லிக்கற மாதிரி உருப்படியாக இல்லை. எல்லா சேனல்களுமே கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. மக்களை போரடிக்க வைக்காமல் சரியான என்டெர்டெயின் பண்ண வேண்டும் என்று சிந்தியுங்கள். இன்னும் ரேட்டிங்கில் நன்றாக வருவீர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications