Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவேக் முதல் டெல்லி கணேஷ் வரை! இத்தனை நடிகர்களுக்கு கடைசி படமான கமலின் இந்தியன் 2

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்தவர்கள் சிலருக்கு இதுவே கடைசி படமான சோகம் ஏற்பட்டுள்ளது.இது ரசிகர்களுக்கு வேதனையை அளித்துள்ளது.

1996 ம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கியவர் ஷங்கர், நடித்தவர் கமல்ஹாசன். தற்போது பழைய படங்களுக்கு பார்ட் 2, 3 4 என வெளியாகி வரும் நிலையில் இந்தியன் 2 படம் எப்போது எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

television indian 2 delhi ganesh 2

அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன். எஸ்ஜே சூர்யா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. எனினும் இந்த படம் இந்தியன் அளவுக்கு இல்லாமல் தோல்வியை சந்தித்தது.

இந்த படத்தால் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தியன் 2 படம் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த சிலருக்கு இது கடைசிப் படமாக அமைந்திருந்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

அதாவது இந்த படத்தில் நடித்த விவேக், மாரிமுத்து, நெடுமுடி வேணு, மனோபாலா ஆகியோருக்கு இதுதான் கடைசி படமாக இருந்தது. அந்த வகையில் டெல்லி கணேஷுக்கு நேற்றைய தினம் உடல்நல பிரச்சினைகளால் இறந்த நிலையில் அவருக்கும் இந்த படம் கடைசி படமாகியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் இறப்பு: நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தனது 59 ஆவது வயதில் மரணமடைந்தார். அவர் மரம் நடுதல், கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியிருந்தார். இவர் இந்த படத்தில் சிபிஐ அதிகாரி இளங்கோவாக நடித்திருந்தார். அவர் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்துவிட்டு திடீரென இறந்துவிட்டதால் வேறு ஒருவரை வைத்து மற்ற காட்சிகளை எடுத்தனர்.

நெடுமுடி வேணு: கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி நெடுமுடி வேணு காலமானார். இவருக்கு வயது 73. இவர் இந்தியன் 2 படத்தில் ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி இளங்கோவாக நடித்திருந்தார். இவர் படத்தில் நடித்த போது பாதியிலேயே இறந்துவிட்டதால் இவரை போன்று உடல் அமைப்பு இருப்பவருக்கு நாசர் குரலை வைத்து டப்பிங் செய்யப்பட்டது.

மாரிமுத்து மரணம்: கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நடிகர் மாரிமுத்து, எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு வயது 57. இவர் இந்தியன் 2 படத்தில் சித்தார்த்தின் மாமாவாக நடித்திருந்தார்.

மனோபாலா மரணம்: நடிகர் மனோபாலா கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 69. இந்தியன் 2 படத்தில் நஞ்சுண்ட மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் மனோபாலா நடித்திருந்தார்.

டெல்லி கணேஷ் மரணம்: டெல்லி கணேஷுக்கு நேற்றைய தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருடைய உயிர் தூக்கத்திலேயே பிரிந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அவருக்கு வயது 80. இந்தியன் 2 படத்தில் சுகாதாரத் துறை செயலாளர் கிருஷ்ண மோகன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+