ரோபோ சங்கர் பேரன் நட்சத்திரனை பார்த்திருக்கீங்களா? முருகன் வேடத்தில் இந்திரஜா மகன்- வாவ் போட்டோஸ்
சென்னை: கமல்ஹாசனால் நட்சத்திரன் என பெயர் வைக்கப்பட்டதை அடுத்து தனது மகனுக்கு முருகர் வேடமிட்டு குழந்தையின் புகைப்படத்தை இந்திரஜா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் எங்க வீட்டு சின்ன முருகன் நட்சத்திரன் என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவியில் கலக்க போவது யாரு ஷோவில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் ரோபோ சங்கர். இதை வைத்து இவர் திரைப்படங்களிலும் நடித்தார். இவரது மனைவி பிரியங்கா.

இவர் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார். இவர்களது மகள் இந்திரஜா. இவர் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்திருந்தார். இந்திரஜாவும் அவருடைய உறவினர் தொடர்வோம் கார்த்திக்கும் காதலித்து வந்தனர்.
திருமணம்
இவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கார்த்திக் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அவருடைய வீட்டில் நிறைய குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இந்திரஜா கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஆண்டு சிறப்பான முறையில் சீமந்தம் செய்தனர்.
இந்திரஜா திருமண உடை
இந்திரஜாவின் திருமண ஜாக்கெட்டில் ஒரு கையில் இந்திரஜாவின் புகைப்படம் மறு கையில் கார்த்திக்கின் புகைப்படம் வைத்திருந்தார். மேலும் தனது பெயரையும் கணவர் பெயரையும் இனிஷியலாக பிரிண்ட் செய்திருந்தார்.
சீமந்த ஜாக்கெட்டில் ஸ்கேன் ரிப்போர்ட்
அது போல் சீமந்தத்தின் போது தனது ரவிக்கையில் குழந்தை படுத்திருப்பது போன்றும் பால் புட்டி உள்ளிட்ட சிறிய சிறிய வேலைப்பாடுகளையும் செய்திருந்தார். அது போல் குழந்தையின் ஸ்கேனையும் தனது ஜாக்கெட்டில் பிரிண்ட் எடுத்து வைத்திருந்தார். ஒரு கையில் ஆண் குழந்தையின் படமும் மறு கையில் பெண் குழந்தையின் படத்தையும் வைத்திருந்தார்.

குழந்தை தெய்வங்கள்
கார்த்திக்கும் குழந்தை தெய்வங்களின் உருவங்கள் பொரித்த அங்கவஸ்திரத்தை அணிந்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரோபோ சங்கர் சொன்னது போல் ஆண் குழந்தையே பிறந்தது.
முகத்தை காட்டவில்லை
இத்தனை நாட்களாக குழந்தையின் முகத்தை காட்டாமல் அந்த குழந்தைக்கு தேவையான உடைகள், சுகாதார பொருட்கள் வாங்குவதை இன்ஸ்டாவில் பதிவு செய்து வந்தனர். மேலும் குழந்தையை தாத்தா ரோபோ சங்கர், பாட்டி பிரியங்கா உள்ளிட்டோரும் கொஞ்சி மகிழ்ந்தனர்.
கமல்ஹாசன் வைத்த பெயர்
இந்த நிலையில் குழந்தைக்கு கமல்ஹாசன் மூலம் பெயர் வைக்க விரும்பினர். இதையடுத்து அவரிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கி நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை சந்தித்தனர். ரோபோ சங்கரின் பேரனுக்கு நட்சத்திரன் என கமல் பெயர் வைத்தார்.

குழந்தையின் முகம்
இது தொடர்பான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த இந்திரஜா- கார்த்திக் தம்பதி, "எங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் டாக்டர் கமல் ஹாசன் ‛நட்சத்திரன்' என பெயரிட்டு வாழ்த்தினார். என்றும் உங்கள் அன்புடன் எங்கள் நட்சத்திரன் கார்த்திக்" என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் முகத்தை இந்திரஜா தற்போது வெளியுலகிற்கு காட்டியுள்ளார். குழந்தைக்கு முருகர் வேடமிட்டு மஞ்சள் துணியால் போர்த்தி நெற்றியில் பட்டை போட்டு எங்கள் வீட்டு சின்ன முருகர் நட்சத்திரன் என குறிப்பிட்டிருக்கிறார்.
மயில் வாகனம்
அது போல் குழந்தை மயில் வாகனத்தில் இருப்பது போன்றும் ஒரு புகைப்படத்தை எடுத்திருந்தார். குழந்தை கையில் வேலை பிடித்திருப்பது போன்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். குழந்தை பார்ப்பதற்கு அப்படியே தந்தை கார்த்திக் போல் இருக்கிறது. குழந்தையை பலர் வாழ்த்தி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications