இதனால் தான் அப்பா உடல்நிலை மோசமானது.. யாரும் தொடாதீங்க! ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஓபன் டாக்!
சென்னை: போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, "மது பழக்கத்திற்கு அடிமையானதால் எனது அப்பாவுக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வந்து பிரபலமான ரோபோ சங்கர், பின்னர் சினிமாவிலும் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்தார். தொடர்ந்து, சின்னத்திரையில் பிரபலமாக அறியப்படும் காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ரோபோ சங்கர் செயல்பட்டு வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கரின் ஒல்லியான படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. ரோபோ சங்கருக்கு உடல்நிலை மோசமாகி விட்டதாக பலர் பலவிதமான தகவல்களை வெளியிட்டு வந்தனர். இது குறித்து ரோபோ சங்கருடைய மனைவி பிரியங்கா தனது கணவருக்கு உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது அப்பாவின் உடல் நிலை குறித்து ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்திரஜா சங்கரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையான நடித்து ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.
ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கடலோர காவல்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா சங்கர் பங்கேற்றார்.
அப்போது பேசிய இந்திரஜா சங்கர், "எனது அப்பா ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக மது பழகத்திற்கு மிகவும் அடிமையாகி இருந்தார். அந்த பழக்கத்தில் இருந்து தற்போது தான் வெளி வந்துள்ளார். தற்போது அந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
மதுப் பழக்கம் அதிகமாக இருந்ததால் என் அப்பாவிற்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. மாற்றம் ஒன்று தான் மாறாதது. அடுத்த தலைமுறையான நாம் தான் இது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications