இடுப்பழகில் பெஸ்ட் யார்.. ரம்யாவா .. இந்துஜாவா.. என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்யா பாண்டியன் இடுப்பழகு சூப்பரா இல்லை மேயாத மான் இந்துஜாவின் இடுப்பழகு டாப்பா.. இதுதாங்க இப்போது ஹாட்டான டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்காம்.

2017 ஆம் ஆண்டு வெளிவந்த மேயாதமான் திரைப்படத்தில் நாயகனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இந்துஜா தான் இணையத்தில் இப்போ செம காட்டு ஹாட். இந்துஜா வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இவர் தனது பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். குறும்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து திரைத் துறையில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் வந்தது. அப்படிக் கிடைத்ததுதான் மேயாதமான் படத்தில் சுடர்விழி என்னும் கதாபாத்திரம்.

 தங்கச்சி ரோல்தான்

தங்கச்சி ரோல்தான்

மேயாதமான் படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியும் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் வைபவ் இன் தங்கையாக இந்துஜா நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் மனதில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். இந்த படத்தில் உள்ள தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

 துணை நடிகையாக

துணை நடிகையாக

மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் .மேயாத மான் படத்திற்காக இவருக்கு சிறந்த
துணை நடிகைக்கான விருதினை ஆனந்தவிகடன் சினிமா விருது வழங்கியுள்ளது. மேயாதமான் படத்தை அடுத்து பூமா ராங், மகாமுனி, பில்லாபாண்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகுதான் விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 பிகில் வேம்பு

பிகில் வேம்பு

திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஒரு புட்பால் பிளேயர் ஆக நடித்திருப்பார். இந்தப் படத்தில் இவருடைய திமிரான போல்டான கேரக்டர் ரசிகர்களிடம் இவர் மீது ஒரு நல்ல செல்வாக்கை பெற்றார். பிகில் படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா உடன் இவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இவரின் பிறந்தநாளுக்கு நயன்தாரா பிறந்தநாள் பரிசளித்துள்ளார். அது ஒரு அழகான வாட்ச். இவரின் பிறந்தநாளுக்கு வர முடியாத தாள் முன்கூட்டியே இவருக்கு வாட்ச் பரிசளித்துள்ளார். அந்த அளவுக்கு இவர் அனைவரிடமும் ஈசியாக பழகி விடுவாராம்.

 மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

பிகில் திரைப்படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்குரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் இவர் நடித்து வெளிவந்த ஆண்டவர் குறும்படம் ஆனது 2018 ஆம் ஆண்டில் பிரபலமாக பேசப்பட்டது. சினிமாவைப் பொருத்தவரை துணை நடிகைகளாக இருந்து கதாநாயகிகளாக மாறியவர்கள் பட்டியல் மிகவும் குறைவுதான் அந்த வரிசையில் நடிகை இந்துஜா வும் இப்பொழுது ஒருவர்.

 செம கவர்ச்சி

செம கவர்ச்சி

மேயாதமான், பிகில் திரைப்படத்தில் படு குடும்ப பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார் . இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோ சூட் பட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் அவர் உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். சேலைகட்டி இடுப்பழகு பளிச்சிட விதவிதமான போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் செம்ம ஹிட்டாகி உள்ளது.

 கைவசம் காக்கி

கைவசம் காக்கி

தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் காக்கி படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. ஒரு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. படவாய்ப்புகள் அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளில் ரகமா போட்டோ ஷூட் க்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய தளத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் பேஷன் ஷோக்களிலும், விளம்பரங்களுக்கும் மாடலாகவும் பணியாற்றிவருகிறார். சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு கருப்பு நிற உடையில் இந்துஜா கொடுத்த கலக்கல் போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

 டீப் நெக் ஓபன்

டீப் நெக் ஓபன்

இதைத்தொடர்ந்து லாக் டவுன் ஓய்வை ஹாட் டாக்கும் விதத்தில் கவர்ச்சி காட்டியுள்ளார் இந்துஜா. சேலை கட்டிய குயிலாக போஸ் கொடுத்திருக்கும் இந்துஜா டீப் நெக் ஓப்பனில் இளசுகளை உசுப்பி விட்டுள்ளார் . அவருடைய புகைப்படங்களைப் பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். அதற்கு அவர் எப்போதும் கிண்டலடித்து வெளியாகும் மீன்ஸ்களை எல்லாம் ஜாலியாக எடுத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார் . அவர்கள் கிண்டல் பண்ணுவது எல்லாமே எனக்கும் என் படத்துக்கு பப்ளிசிட்டி தானே என்று கூலா சொல்லியிருக்கிறார்.

Recommended Video

    Sayyesha Vs Ramya Pandian, Dance Challenge | Classical Vs Western
     ரம்யா இடுப்பை விடவா

    ரம்யா இடுப்பை விடவா

    ஆனாலும் ரம்யா பாண்டியன் இடுப்பை விடவா இந்துஜா இடுப்பு எடுப்பா இருக்கு.. என்று ரம்யா பாண்டியன் ரசிகர்களும் வரிந்து கட்டிக் கொண்டு வருகின்றனர். ஆனால் கவர்ச்சி பார்வையிலும் ரசிகர்களை விட்டு வைக்காமல் இருக்கிறார் இந்துஜா. இதனால் அவரது ரசிகர்கள் நீங்க இடுப்பழகில் மட்டுமல்ல, கவர்ச்சியிலும் ரம்யா பாண்டியனையே மிஞ்சிட்டீங்க அப்படின்னு கமெண்ட் பண்ணி இருக்காங்க.

    நீங்க சொல்லுங்க.. உங்க சாய்ஸ் யார்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+