அட... நடிகை இனியாவின் தங்கச்சியா இவர்... சாரக் காத்து வீசும்போது!
சென்னை: சன் டிவியின் ஞாயிறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சீனியர் சுட்டீஸ் சற்றே கலகலப்பானதாக இருக்கிறது.
இந்த வாரம் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் குடும்ப இளம் பெண்கள் கலந்துகொண்டார்கள்.நிகழ்ச்சி வாய்விட்டு சிரிக்க வைத்து கலகலக்க வைக்கிறது.
சீரியலில் நட்சத்திராவின் அண்ணியாக நடிப்பவர் பெயர் தனிஷா குப்ப்பாண்டாவாம்... இதை வைத்து சிறிது நேரம் கலாய்த்தார் இமான் அண்ணாச்சி.

ஹேர் கலர்
சீரியலில் குஷ்பூவின் ஓரகத்தியாக நடிக்கும் உமாவின் உண்மை பெயர் சாரா. வயசாயிருச்சுல்ல... கருப்பு கலர் அடிச்சுக்காம முடியை ஏன் இப்படி வச்சுருக்கேன்னு கேட்டார். பத்தாயிரம் ரூபாய் செலவு பண்ணி ஹேர் கலர் பண்ணி ருக்கேன்...எனக்கு இருபத்தெட்டு வயசுதான் ஆகுதுன்னு சொன்னார்.

பசங்க வருவாங்க
எதுக்குமா இப்படி செலவு பண்ணி கலர் பண்ணிக்கறீங்க... ஸ்ட்ரெயிட்னிங் பண்ணிக்கறீங்கன்னு அண்ணாச்சி கேட்க... அழகாயிருக்கும்...பசங்க பின்னாடி வருவாங்கன்னு பளிச்சுன்னு சொன்னார். உன் பின்னாடி வந்தாங்களாம்மான்னு கேட்க... ஆமாம் இப்போ நான் நடந்து போறேன்.. நீங்க பின்னாடியே வருவீங்க பாருங்கன்னு ஸ்டைலா நடக்க அண்ணாச்சி பின்னாடி போனது சிரிப்பாக இருந்தது.

தப்பா டேட்டிங்
கல்யாணத்துக்கு முன்னால டேட்டிங் போறது தப்பா சரியான்னு அண்ணாச்சி கேட்டார். தப்பு இல்லைன்னும் தப்புண்ணும்... அது சொந்த விருப்பம்னும் சொன்னாங்க. ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கத்தான் இந்த டேட்டிங்னு விளக்கம் சொன்னாங்க.

இனியா தங்கை
உனக்கு நேஷனல் அவார்டு வாங்கணும்னு ஆசை இருக்கான்னு சாராகிட்ட அண்ணாச்சி கேட்டார். எதுக்கு... வீட்டில் அக்கா இனியா நேஷனல் அவார்டு நடிகைதான் அது போதும்னு சொன்னார். ஆஹா..நடிகை இனியாவின் தங்கை இந்த சாரா.

கருவி கிடைத்தால்
நேரம் மாற்று கருவி கிடைத்தால் என்ன செய்வீங்கன்னு கேட்டபோது, சின்ன வயசுல பாட்டிகிட்ட வளர்ந்தேன்...அப்பா,அம்மாகிட்ட வளர முடியலைன்னு ஏக்கம் இன்னும் இருக்கு. சின்ன வயசுக்கு போயி அப்பாஅம்மா கூட வாழ்வேன்... விவசாய நிலத்தை எல்லாம் அழிச்சு கட்டிடம் கட்டி இருக்காங்க. அதை எல்லாம் அழிச்சு மீண்டும் விவசாய நிலமாக அதை மாத்துவேன்னு நிஷா சொன்னார்.
இவர் சன் மியூசிக்கின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு வந்தவர். மற்ற பெண்களும் விவசாயம் குறித்து பேசியது அர்த்தமுள்ளதாக இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications