Chocolate Serial: பைக் ரைட் போகும்போது.. அப்பன் வீட்டு ரோடுன்னு கெத்து வரும்....!
சென்னை: சன் டிவியின் சாக்லேட் சீரியலில் பைக் ரைட் போகணும்னு ஆசைப்படும் இனியா, புருஷன் கார்த்திக்கிடம் பைக் ரைடு போகும்போது ரோடே நம்ம ரோடு.. எங்க அப்பன் வீட்டு ரோடுன்னு கெத்து வரும்னு சொல்றா.
எப்போதும் காரில் சென்று பழக்கப்பட்ட கார்த்திக்... பைக்கிலேயா.. பொல்யூஷன்..சத்தம் என்று தயங்கறான். அப்போதுதான் இனியா பைக்கில் போனால் ரோடே எங்க அப்பன் வீட்டு ரோடுன்னு ஒரு கெத்து வரும்னு சொல்றா. சரி.. வான்னு பைக்கை எடுத்துட்டு கிளம்பிட்டான்.
ஒரு ஸ்பீட் இல்லை..ஒரு பிரேக் இல்லை.. ரொம்ப போரா வண்டி ஒட்டிக்கிட்டு இருக்கான் கார்த்திக். தப்பித்தவறி ஒரு பிரேக் போட்டாலும் மரமண்டை ஸ்பீட் பிரேக்.. அதான் பிரேக் போட்டேன்னு சொல்றான் கார்த்திக்.. கடவுளேன்னு நொந்துக்கறா இனியா.இனி இவனை இப்படியே ஓட்ட சொன்னா இளமை வேகம் தாங்காதுன்னு நினைச்ச இனியா பைக்கை தான் ஓட்டுவதாக உட்கார்ந்து கொண்டாள்.

சாக்லேட் சுவீட்ஸ்
பேக்கரி வைத்து நடத்தி வந்த இனியாவின் குடும்பத்தில் இனியா அப்பாவின் தொழிலை கச்சிதமாக கத்துக்கிட்டா. அதிலும் அப்பா செய்யும் சாக்லேட்ஸ் சுவீட்டை தானும் கை வந்த கலையா கத்துக்கிட்டு இதை வச்சு பெரிய பிசினெஸ் செய்யலாம்னு தொழிலதிபர்கள் நினைக்கும் அளவுக்கு சாக்லேட்ஸ் சுவீட்ஸ் சூப்பரா செய்யறா.

பிசினெஸ் ஐடியா
கார்த்திக் அப்பா பிசினெஸ் லாஸாகி கடன் பிரச்சனையில் தலைமறைவாகிட்டார். கார்த்திக் கடன் சுமையில் தள்ளாடி நிற்க, கார்த்திக் அம்மாதான் இனியாவை கல்யாணம் செய்துக்கொள்ளும் ஐடியாவை தர்றாங்க. கார்த்திக் ஏற்கனவே பல்லவியை காதலிச்சுகிட்டு இருக்கான். இருந்தாலும் இனியாவை கல்யாணம் செய்துக்கொண்டு, சாக்லேட்ஸ் சுவீட்ஸ் செய்ய கற்றுக்கொண்ட பின்னர் அவளை டிவோர்ஸ் பண்ணிடலாம்னு சொல்றாங்க.

கல்யாணம் காதல்
இனியா முதலில் கார்த்திக்கை கண்டுக்கொள்ளாமல் இருக்க, விஜயன் வேஷத்தில் இனியா வீட்டு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்து அவளை காதலிக்கிறான். இனியாவும் காதலிக்க ஆரம்பிச்சு இப்போ கல்யாணமும் நடந்துருச்சு. இனியாவை சாக்லேட் ஸ்வீட் செய்ய வச்சு, ஏஜென்சி எடுக்கவும் வழி வகுத்தாச்சு.

சைன் போட
அக்ரிமெண்ட் சைன் பண்ண இனியாவை அவளுக்குத் தெரியாமலே அழைச்சுக்கிட்டு போக திட்டமிட்டு, வெளியில் போயிட்டு வரலாமா இனியான்னு கேட்கறான். அப்போதுதான் காரில் வேணாம் கார்த்திக்... பைக்ல போகலாம்ன்னு சொல்றா.வேணாம் இனியான்னு செல்லும்போதுதான் காரில் போனால் காருக்கு மட்டும்தான் நீங்க ஓனர்னு தோணும்.. பைக்கில் போனால், ரோட்டுக்கே நான் ஓனர்னு ஒரு கெத்து வரும் பாருங்க என்று இனியா அனுபவித்து சொல்ல பைக் ரைட் கிளம்பிட்டாங்க...

கொரோனாவைரஸ்
புல்லட்டை தன் இஷடத்துக்கு கொண்டு வந்து ரோட்டையே அளந்துக்கிட்டு ஓட்டிக்கிட்டு போறா இனியா. டிராஃபிக் போலீஸ் புடிச்சுக்கிட்டாங்க. கார்த்திக் பணக்காரனாச்சே..பணம் கட்டிடறேன்.. அது இதுன்னு பேச கோர்ட்டுக்குத்தான் போகணும்னு சொல்லிட்டாங்க. நம்மாளு தரை லோக்கல் ஆச்சே.. சார் அவருக்கு கொரோனாவைரஸ் இருக்கு...டாக்டர்கிட்டே அழைச்சுட்டு போறேன்னு சொன்னதும் பஞ்சா பறந்துட்டாங்க போலீஸ் காரய்ங்க.கொரோனாவைரஸ் தாக்கம் எப்படி எல்லாம் வேலை செய்யுது பாருங்க!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications