நயனுக்கு அறம் அமைந்தது போல ஐஸ்வர்யா ராஜேஷுக்கு க/பெ ரணசிங்கம்?
சென்னை: விஜய் சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷின் க/பெ ரணசிங்கம்; இது ஒரு முக்கியமான கோலிவுட் படம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் கிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்து தகவல் பகிர்ந்துள்ளார்.
கோவிட் 19 தொற்று காரணமாக வருகிற 14ம் தேதி வரை லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில், திரைப்படங்கள், சின்னத்திரை சீரியல்களுக்கான போஸ்ட் புரடக்ஷன் பணிகளைத் துவக்கலாம் என்று அரசு அனுமதி அளித்து இருக்கிறது.
போஸ்ட் புரடக்ஷன் பணிகளில் ஒன்றான இசை அமைக்கும் பணியை கிப்ரான் துவக்க இருக்கும் பட்சத்தில், இசை அமைப்பதற்கு முன்னர் க/பெ ரணசிங்கம் படத்தை பார்த்துவிட்டு, படம் குறித்து வெகுவாக பாராட்டி இருக்கார்

ஐஸ்வர்யா விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். ஐஸ்வர்யா ராஜேஷ் எளிமையான கதாபாத்திரங்களில் நடித்து, அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இருப்பவர். தர்மதுரை படத்துக்குப் பிறகு இருவரும் க/பெ ரணசிங்கம் படத்தில் இணைந்துள்ளனர்.

நல்ல வாய்ப்புக்கள்
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பிற மாநில மொழி படங்களில் இருந்து நல்ல வாய்ப்புக்களாக வந்து நடித்து புகழடைந்தும் வருகிறார். பெண்களுக்கு பெயர் வாங்கித் தரும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

கனா ஆசை
கனா படத்தில் நடித்ததன் மூலம் இந்த ஆசை நிறைவேறியது என்றும் அவ்வப்போது கூறி வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். நயன்தாரா மாதிரி, ஹீரோயின் சப்ஜெக்ட்டுக்காக படங்கள் ஓட வேண்டிய நிலை எல்லா ஹீரோயின்களுக்கும் வேண்டும் என்று கூறி இருந்தார். அதே சமயம் இந்த படம் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒன்றாகும் என்றும், தானும் அதில் ஒரு பகுதியாக இசை பங்கு வகிப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாக கிப்ரான் கூறியுள்ளார்.

க/பெ ராணசிங்கம்
அறம் படத்துக்குப் பிறகு, க/பெ ராணாசிங்கம் படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கிப்ரான் புகழாரம் சூட்டி உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தின் தனது லுக்கை இன்ஸ்டாவில் வெளியிட்டமைக்கே பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications