இந்த வாரம் "ஸ்மால் பாஸ்" இல்லை.. அறிவித்த பிக் பாஸ்.. மாயா - பூர்ணிமாவை காப்பாற்ற பிளான்? போச்சே
சென்னை: பிக் பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் மட்டும் ஸ்மால் பாஸ் இல்லை என்று அறிவிப்பு வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 7ல் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகின்றன. நடந்து வரும் பிக் பாஸ் 7 சீசனில் நடிகர் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிராக நடிகை மாயா உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பினார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர் வெளியேற்றப்பட்டு உள்ளார்.

முதல்நாள் வரை பிரதீப் உடன் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் சகஜமாக பேசி வந்த நிலையில் வார இறுதியில் திடீரென இப்படி பாதுகாப்பு இல்லை என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது. அதோடு பிரதீப் மீது வைக்கப்படும் புகார்கள் பலவற்றிற்கு ஆதாரம் இல்லாதது, முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இருப்பதும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கமல் கேள்வி; கடந்த வார இறுதியில் இதற்கான கேள்விகளை கமல்ஹாசன் எழுப்பினார். ஆனாலும் அவர் அங்கே எடுக்கப்பட்ட முடிவை ஆதரிக்கும் விதமாகவே பேசினார். முக்கியமாக இந்த முடிவை நான் எடுக்கவில்லை. நாங்கள் ரெட் கார்டு ஆப்ஷன் கொடுத்தோம்.
அவர்கள்தான் அதை பயன்படுத்தினார்கள். மற்றபடி நாங்கள் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கவில்லை என்று கமல் ஹாசன் நாசுக்காக விலகிக்கொண்டார் . சமூக வலைத்தளங்களில் தன் மீது விழுந்த அடிக்கு பதிலடி தராமல்.. அவர் ஒதுங்கிக்கொண்டார்.
அதே சமயம் மாயாவிடம் கமல்ஹாசன் கரிசனம் காட்டுகிறார். அவர் மிகவும் தன்மையாக நடந்து கொள்கிறார். கோபம் அடைவது இல்லை. வலிக்காது.. வலிக்காது பொறுமையா என்று சொல்வது போல மிகவும் அன்பாக தட்டிக்கொடுக்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
மாயா - பூர்ணிமா ஆதரவு: இந்த நிலையில்தான் இந்த வாரம் தினேஷ் கேப்டன் ஆகி உள்ளார். ஏற்கனவே தினேஷிற்கும் மாயா பூர்ணிமாவிற்கும் மோதல் உள்ளது. அதனால் தினேஷ் கேப்டன் ஆனதும் பின்வரும் விஷயங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
1. தினேஷ் ஸ்மால் பாஸ் வீட்டில் மாயா களமிறக்குவார். பூர்ணிமாவை பிக் பாஸ் வீட்டில் வைத்து இருப்பார்.
2. இதன் மூலம் தோழிகளை பிரிப்பார். அதோடு நிற்காமல்.. நிக்சனை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்புவார். அவரின் கிளினிங் வேலைகளை கண்காணிப்பார்.
3. அர்ச்சனாவை பிக்பாஸ் வீட்டிற்கு கொண்டு வருவார்.
4. பூர்ணிமாவை தனிமை படுத்துவார். இவர்களை எல்லாம் பிரிப்பதன் மூலம் bully கேங்கை காலி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

5. கடந்த வாரம் இவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு எல்லாம் தினேஷ் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
காப்பாற்றினர்: ஆனால் இந்த வாரம் ஸ்மால் பாஸ் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இது நியாயமே இல்லை. வேண்டுமென்றே பூர்ணிமா மாயாவை காக்க வேண்டும் என்றும் இப்படி செய்கின்றனர்.
இவர்களுக்கு மறைமுகமாக கமல்ஹாசன் ஆதரவு உள்ளது என்று சந்தேகிக்கும் நேரத்தில் இப்போது இப்படி செய்துள்ளனர். அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இப்படி ஸ்மால் பாஸ் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது தவறானது என்று விமர்சனம் வைத்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications