சந்திரகுமாரி சீரியல் முடிவுக்கு வருதா... ரடான் தயாரிப்பு இன்னும் இருக்குமா?
சென்னை: சன் டிவியில் 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்திரகுமாரி சீரியல் இன்று மாலையுடன் முடிந்து விடும் என்றே தோன்றுகிறது.
வரும் திங்கள் முதல் மாலை 6:30 மணிக்கு தமிழ்ச்செல்வி என்கிற ஒரு சீரியல் ஒளிபரப்பாகி உள்ளது. அதே சமயம் சந்திரகுமாரி நேர மாற்றம் என்கிற அறிவிப்பு இல்லை.
அதனால் சந்திரகுமாரி சீரியலுக்கு எண்ட் கார்டு போட்டுவிடுவார்கள் என்கிற முடிவுக்குத்தான் வரத் தோன்றுகிறது.

ஒருத்தி புருஷனை இன்னொருத்தி
முன்பு எந்த சீரியலில் பார்த்தாலும், ஒருத்தி புருஷன் மேல் இன்னொருத்தி ஆசைப்படுவது... கள்ளத்தனாமா குடித்தனம் நடத்துவது... இப்படித்தான் இருக்கும் . இதுக்கெல்லாம் இப்போது வரும் சீரியல்களில் அவ்வளவாக இடமில்லாமல்தான் இருந்து வந்தது.

சந்திரகுமாரி சீரியலில் ஆரம்பம்
இதை மறுபடியும் சந்திரகுமாரி சீரியல் ஆரம்பித்து வைத்து இருக்கிறதுன்னுதான் சொல்லணும். சந்திராவின் புருஷன் நீலகண்டன் ருத்ராவுடன் கல்யாணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்துவது இதெல்லாம் இன்றைய காலத்து பெண்களுக்கு பிடிக்கலைன்னுதான் சொல்லணும்.

அஞ்சலிக்கு சத்யாவுடன்
அஞ்சலிக்கு சத்யாவுடன் கல்யாணம் நிச்சயம் ஆகுது. அஞ்சலியை முன்பு காதலிச்ச தாய் மாமா மகன் ஆதவன், எப்படியாவது அஞ்சலி சத்யா கல்யாணத்தை நிறுத்தணும்னு வேலை பார்க்கிறான்.

யாரோ பெத்த பொண்ணுங்களை
இதே மாதிரி சந்திராவை காப்பாத்தின சீதாவின் அப்பா இறந்துவிட, சீதாவையும், அவள் தங்கையையும் கொண்டு வந்து வீட்டில் வச்சுக்கறாங்க. அஞ்சலி கோவம் வந்தாலும் இவங்களைத்தான் திட்டறா. சந்திரா கோவம் வந்தாலும் இந்த பொண்ணுங்களைத்தான் பொளேர் பொளேர்னு அறையறாங்க....

உரிமையாம்..அன்பாம்.. பாசமாம்!
அவங்க பெத்த பொண்ணை அடிக்க மாட்டேங்கறாங்க... நம்ம மட்டும் அவங்களுக்குத் தொக்கான்னு தங்கச்சி கேட்கறா. வா இனிமே இங்கே இருக்க வேணாம்னு தங்கச்சி சொல்ல இருவரும் வீட்டை விட்டு போறாங்க. சத்யாவும், அஞ்சலியும் ரெண்டு பேரையும் தேடி அழைச்சுக்கிட்டு வர்றாங்க.. அடிக்க உரிமை உண்டுன்னு சமாதானம் வேற சொல்றாங்க.

வீட்டுக்கு வந்தும் சீதாவுக்கு
வீட்டுக்கு வந்தும் சீதாவுக்கு அடி விழுது...அடிச்சா என்னை விட்டுட்டு போயிடுவியாடின்னு மறுபடியும் அடி. இது என்ன மாதிரி கேரக்டர்..இதே அன்பையும், கோவத்தையு பெத்த பொண்ணு அஞ்சலிகிட்ட காமிக்காம அப்பாவும், பொண்ணும் சேர்ந்துடுவாங்களோன்னு கவலைதான் சந்திராவுக்கு.
சீரியலை எப்படி என்னிக்கு முடிக்கறாங்களோ பார்க்கலாம்...
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications