Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக்பாஸ் வீட்டுக்குள் இவரா? தெய்வமே, நீங்க இங்கயும் வர்றீங்களா? பாட்டு, அழுகை, நடிப்பு, டான்ஸ்.. ஆஹா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் சீசன் விரைவில் துவங்க உள்ள நிலையில், தினம் தினம் அதுகுறித்த எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன. இந்த நேரத்தில், போட்டியாளர்கள் யார் யார் என்ற ஆர்வமும் பெருகி கொண்டிருக்கிறது. அந்தவகையில், இந்த பிரபலமும் பிக்பாஸ் போட்டியில் நுழைய போகிறாரா? என்ற வியப்பு மேலிட்டு வருகிறது. யாரந்த பிரபலம் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு, விரைவில் 8வது சீசனுக்குள் நுழைய போகிறது. இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து நடத்த போகிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியதுமே, நிகழ்ச்சி குறித்த ஆர்வம் தொற்றிக் கொண்டுவிட்டது.

bigg boss divakaran

பிரபலங்கள்: ஆனால், போட்டியாளர்கள் யார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வரவில்லை.. எனினும், சில பிரபலங்கள் பெயர்கள் அடிபட்டு வருகிறது.. இதில் சிலர் புதுமுகம் என்றாலும், பெருபாலும் ஏற்கனவே பங்கேற்ற போட்டியாளர்களே, மீண்டும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்..

அந்தவகையில், 15 போட்டியாளர்களின் பெயர், விவரங்கள் இணையத்தில் வலம்வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த லிஸ்ட்டில் உள்ள பெயர்களும் மாறிக் கொண்டேயிருக்கிறது. வரும் அக்டோபர் முதல் வாரம் அதாவது 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. எனினும், எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை.

போட்டியாளர் லிஸ்ட்: இப்படிப்பட்ட சூழலில், இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகரன், பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக களமிறங்கினால், நானே இறுதியில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

பிரபல நகைச்சுவை சதிஷ், ஹீரோவாக நடித்துள்ள படம் "சட்டம் 7என் கையில்".. சஸ்பென்ஸ் + ஆக்‌ஷன் + திரில்லர் என இந்த படம் வெளிவர போகிறது.. சிக்ஸர் படத்தின் டைரக்டர்தான் இந்த படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்.. வருகிற 27ம் தேதி இந்த படம் வெளியாகிறது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடந்துள்ளது.. இதில், பல பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.

திவாகரன் பேட்டி: அந்தவகையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகரனும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.. பின்னர் செய்தியாளர்களிடம் திவாகரன் பேசும்போது, படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார்.

இந்தப் படத்திற்கு பொதுமக்கள்கிட்ட இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சதீஷ் அண்ணா ஆக்சிடன்ட் ஆகி அழும் காட்சி நன்றாக இருந்தது என்று சொன்ன திவாகரன் அந்த சீனை நடித்தும், அழுதும் காட்டினார். பிறகு "சொல்லாமலே யார் பார்த்தது" என்ற பூவே உனக்காக படத்தின் பாடலை 4 வரி பாடி காட்டினார். உடனே செய்தியாளர்கள் போதும், போதும் என்றதும், திவாகரன் பாடுவதை நிறுத்திவிட்டார்.

பிக்பாஸ்: அப்போது செய்தியாளர்கள், பிக்பாஸ் பற்றி கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு திவாகரன், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வரவில்லை.. எல்லா மீடியாவிலும் என் பெயர்தான் குறிப்பிட்டு வருகிறார்கள். நான் ஏற்கனவே 200 வீடியோக்களை பதிவிட்டு, ஏகப்பட்ட கேலி கிண்டல்களை கடந்து இப்படி வெற்றி பெற்றிருக்கிறேன்.. அந்தவகையில், அதிகளவில் என்னுடைய பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிபடுகிறது.

விஜய் டிவியில் எனக்கு வாய்ப்பு வரலாம்.. எப்போதுமே விஜய் டிவி, யார் பெயரையும் சொல்ல மாட்டாங்க.. பிக்பாஸ் துவங்கும்வரை, சீக்ரெட்டாகவே பெயர் வெச்சிருப்பாங்க . என்ன வேணும்னாலும் நடக்கலாம்.. அதனால், நீங்க தைரியமா இருங்கன்னு ரசிகர்களும், மீடியாக்களும் சொல்றாங்க. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதனால நானும் வெயிட் பண்றேன்" என்கிறார் திவாகரன்.

எதிர்பார்ப்பு: வரும் முதல் வாரத்தில் நிகழ்ச்சி துவங்குவதாக இருந்தால், போட்டியாளர்களை விஜய் டிவி என்றோ தேர்ந்தெடுத்து முடித்திருக்கும் என்றும் சொல்கிறார்கள்.. எனவே திவாகரன் பிக்பாஸ் வீட்ற்குள் போவாரா? என்பது 6ம்தேதி தான் தெரியும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+