மணிமேகலை ஆவேசம்.. வந்து விழுந்த போட்டோ.. நீளும் விமர்சனங்கள்.. ஐடியா தந்த ஃபேன்ஸ்.. அப்ப பிரியங்கா?
சென்னை: மணிமேகலை - பிரியங்கா விவகாரத்தில், ஆதரவும், எதிர்ப்பும் என கலவை விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், ஒருசிலர் மணிமேகலை மீது வன்மத்தை கக்கி வருவதாகவும், தனிமனித தாக்குதல் எதற்குமே தீர்வு இல்லை என்றும் மணிமேகலையின் ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்..
விஜய் டிவியில், தொகுப்பாளர் பிரியங்கா மீது மறைமுகமான குற்றச்சாட்டை முன்வைத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை விலகியிருக்கிறார். சுயமரியாதையை முன்னிறுத்தி, மணிமேகலை வெளியிட்டிருந்த அறிக்கையானது பலரது கவனத்தையும் பெற்று, பெரும்பாலானோரின் ஆதரவையும் ஒரே நாளில் பெற்று தந்துள்ளது.

சப்போர்ட்: விஜய் டிவியின் முக்கிய பிரபலங்களும் மணிமேகலைக்கு சப்போர்ட்டாக வந்துள்ளனர்.. குறிப்பாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற குரேஷி, அனிதா சம்பத், பின்னணி பாடகி சுசித்ரா என பலரும் திரண்டு வந்து மணிமேகலைக்கு வெளிப்படையாகவே ஆதரவு தந்திருக்கிறார்கள்.
ஆனால் ஒருசாரார், மணிமேகலை மீதான புகார்களை அள்ளி வீச துவங்கியிருக்கிறார்கள். இப்படியொரு சம்பவம் நடப்பது தெரிந்தால், ஆரம்பத்திலேயே நேரடியாகவே பிரியங்காவிடம் பேசி சரிசெய்திருக்கலாமே? அதை விட்டுவிட்டு, பொதுவெளியில் அசிங்கப்படுத்த வேண்டிய தேவை மணிமேகலைக்கு என்ன வந்தது? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
பிரியங்கா: அதுமட்டுமல்ல, யாருடைய கண்டண்ட் நன்றாக உள்ளதோ, அதைதான் ரியாலிட்டி ஷோக்களில் ஒளிபரப்புவார்கள். இது ஒரு சாதாரண விஷயம்.. பிரியங்காவுக்கு விருது கொடுத்த பொறாமையால்தான், மணிமேகலை இவ்வாறு குற்றச்சாட்டுகளை கூறுவதாக மேலும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இணையவாசிகள் இப்படி விமர்சித்து வருகிறார்கள் என்றால், மதத்தை குறிப்பிட்டு மணிமேகலையை ஒரு நடிகை விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மணிமேகலை பதிவிட்டிருந்த அறிவிப்பில், "Trust God" என குறிப்பிட்டிருந்தார்.. இதற்கு எந்த கடவுள் என்று சீரியல் நடிகை ஶ்ரீநிதி பதிவிட்டுள்ளார்.. இதனால் கொதிப்படைந்த நெட்டிசன்கள், மணிமேகலை கணவர் ஹுசைன் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், இப்படி கமெண்ட் பதிவிட்டுள்ளதாக கூறி நடிகையை விமர்சித்து வருகிறார்கள்.
போட்டோ: இந்த பரபரப்புக்கு நடுவில், மணிமேகலையின் தற்போதைய போட்டோவை பதிவிட்டு, இதையும் வைத்து விமர்சிக்க துவங்கியிருக்கிறது ஒரு க்ரூப்.. காரணம், மணிமேகலை வெளியிட்டிருந்த வீடியோவில் அவர் சற்று உடல் பருமனாக இருக்கிறார்.. உடனே இதைப்பார்த்த சிலர், ஓ, மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? அதனால்தான் பிரியங்கா மீது வம்பிழுத்துவிட்டு விலகுகிறாரா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
2 தொகுப்பாளர்களிடம் எழுந்த ஈகோ பிரச்சனையானது, இன்று மத ரீதியாகவும், தனிமனித தாக்குதலாகவும் வெடித்து கிளம்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பிரியங்கா: ஏற்கனவே, பிரியங்காவுக்கு ஆதரவானவர்கள், பிரியங்கா குறித்த கலகல வீடியோவை இணையத்தில் டிரெண்டாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், மணிமேகலை மீதான எதிர்மறையான விமர்சனங்களை பரப்பி விடுவது யார் என்ற சலசலப்பும் கிளம்பியிருக்கிறது.
இதற்கு நடுவில், மணிமேகலைக்கு அவரது நலம்விரும்பிகள் முக்கிய யோசனையை தெரிவித்து வருகிறார்கள்.. விஜய் டிவியில் அசிங்கப்படுவதைவிட, பேசாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "டாப்பு குக்கு டூப் குக்கு" நிகழ்ச்சிக்கு மணிமேகலை செல்லலாம்.. ஏற்கனவே, வெங்கடேஷ் பட் உள்ள நிலையில் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது.
புது ஐடியா: மேலும், பரத், ஜிபி முத்து என ஏற்கனவே விஜய் டிவியில் இருந்த பட்டாளங்கள்தான் அங்கேயும் உள்ளதால், மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், எந்த சலசலப்பும் இருக்க வாய்ப்பில்லை.. அதுமட்டுமல்லாமல், விஜய் டிவியில் பிரியங்காவுக்கு செப் தாமுவின் சப்போர்ட் நிறையவே இருக்கும் என்பதால், இனியும் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போவது நன்றாக இருக்காது" என்றும் அட்வைஸ் தந்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications