Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிமேகலையின் தன்மானம் இடம்தருமா? இந்த தகவல் உண்மையா? அன்றே உடைத்து சொன்னாரே பிரபலம்? அப்ப பிரியங்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில், போட்டியாளராக மணிமேகலை கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வலுவாக கசிந்து கொண்டிருக்கின்றன. இது உண்மையா? அல்லது புரளியா? என்று தெரியாமல், நெட்டிசன்கள் குழம்பி போய் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் 8-வது சீசன், வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் துவங்குகிறது.. இதற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் விஜய் டிவி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த முறை பிக் பாஸ் சீசனை, விஜய் சேதுபதி தொகுத்து வழங்க போகிறார்.

television manimegalai priyanka

எப்போதுமே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார் என்பதை அறிந்து கொள்ள, நேயர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.. இதற்கான கணிப்புகளும், நிகழ்ச்சி துவங்குவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பாகவே கிளம்பிவிடும்.

எதிர்பார்ப்புகள்: அப்படித்தான், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, பிக்பாஸ் வீட்டிற்குள் வீட்டிற்குள் செல்வது இவரா? அவரா? என்று மிகப்பெரிய விவாதமே ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை போட்டியாளர்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவுமே அறிவிக்கப்படவில்லை.

வெறும் யூகங்களின் அடிப்படையில் சிலரது பெயர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் தொடர்ந்து அடிபடும் பெயர் மணிமேகலைதான்.. அதாவது, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

பிரியங்கா: அந்தவகையில்தான், மணிமேகலையின் பெயரும் அடிபடுகிறது.. ஆனால், இது இணையவாசிகளை குழப்பி விட்டுள்ளது.. காரணம், பிரியங்கா மீதான குற்றச்சாட்டுகளை மறைமுகமாக வீசிவிட்டு விஜய் டிவியை விட்டு வெளியே வந்த மணிமேகலைக்கு, விஜய் டிவி மீண்டும் எப்படி வாய்ப்பு தரும்? என்று கேட்கிறார்கள்.

அதேபோல, விஜய் டிவியில் உள்ள பிரபலங்களே, மணிமேகலைக்கு எதிரான "செருப்பு, துடைப்பம்" என்று கமெண்ட்களை பதிவிட்டிருக்கும் சூழலில், மீண்டும் அவர்களுடனேயே சென்று மணிமேகலை எப்படி பணியாற்றுவார்? என்றும் சந்தேகம் எழுந்துள்ளன..

மணிமேகலை: அதுமட்டுமல்ல, விஜய் டிவியில் நடப்பதை வெளியே பேசக்கூடாது என்று தெரிந்தும், மணிமேகலை வீடியோ வெளியிட்டது விஜய் டிவிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை காயப்படுத்தியிருப்பதாகவும், தயாரிப்பு நிறுவனமே சொல்லி மணிமேகலையை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டது. மணிமேகலையை ஒன்றும் தானாக வெளியேறவில்லை என்றும் ஆர்.ஜே. ஷா வீடியோ பதிவிட்டு கூறியிருந்தார். இந்த வீடியோவை அவர் டெலிட் செய்துவிட்டாலும், கிட்டத்தட்ட இதே கருத்தைதான் பிரபல நடிகை ஷகீலாவும் தெரிவித்திருந்தார்.

அப்படியிருக்கும்போது, விஜய் டிவி எப்படி மணிமேகலையை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துக் கொள்ளும்? என தெரியவில்லை.. ஒருவேளை, மணிமேகலையை சமாதானம் செய்து, பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அழைத்து கொண்டால், அது விஜய் டிவி மீதான, விமர்சனங்களை ஓரளவு குறைக்க உதவும் என்றும் கணக்கு போடப்படுகிறதாம். இதெல்லாம் சேர்ந்துதான், இணையவாசிகளை குழப்பிவிட்டு வருகிறது.

பிக்பாஸ்: ஆனால், 4 நாட்களுக்கு முன்பு பிரபல பத்திரிகையாளர் செய்யாறு ரவி ஒரு பேட்டி தந்திருந்தார். அதில் அவர் சொல்லும்போது, "இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மணிமேகலையை அனுப்புவதற்காகவே இப்படியொரு நாடகம் நடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன.. ஏனென்றால், பரபரப்பு சம்பவங்களை செய்து, மீடியாவில் பெரிதளவில் பேசப்பட்டால்தான், மக்களின் சப்போர்ட் கிடைக்கும், அப்போதுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் எளிதாக நுழைய முடியும். எனவே, அதற்கான நாடகம் இது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஆனால், உங்க காசும் வேணாம், உங்க நிகழ்ச்சியும் வேணாம், மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லிவிட்டு போன மணிமேகலை, இது போன்ற நாடகத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பாரா?

நாடகமா: அப்படியே ஒப்புக் கொண்டாலும், அது மணிமேகலைக்குதான் பின்னடைவாக இருக்கும்.. மணிமேகலை - பிரியங்கா விவகாரம், குக் வித் கோமாளியின் டிஆர்பிக்காக நடத்தப்பட்ட நாடகமா? அல்லது பிக்பாஸ் சீசன் 8-க்காக நடத்தப்பட்ட நாடகமா? என்று இனிமேல்தான் தெரியவரும்" என்று செய்யாறு ரவி கூறியிருந்ததையும் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+