பவுர்ணமிக்கா ராமன்... கஷ்டத்துக்கு விடிவு காலம் எப்போ.. இவ்ளோ கஷ்டப்படறாளே... ஐயோ பாவம்!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் பவுர்ணமியை அப்பாவுக்கு பிடிக்கவே பிடிக்காது.ரெண்டாம் தாரத்து மூலமா பிறந்த பவானியை உயிரா நினைக்கறார் அப்பா சக்ரவர்த்தி
பவுர்ணமியின் பள்ளி காலத்து தோழன் ராமன், மறுபடி பவுர்ணமியை பார்க்க நேரிட்டது. ஒரே தெருவில் வசிச்சாலும் பவுர்ணமியை அவன் பார்த்ததில்லை.
பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கறேன்னு சக்ரவர்த்தி சொல்ல, பவுர்ணமிக்குத்தான்னு நினைச்சு சித்தியும், தங்கையும் அலங்காரம் செய்து மாப்பிள்ளை முன் அமர வைக்க, ஷாக் ஆகிறார் சக்ரவர்த்தி.

பொண்ணு பவானி
வாசுகி கொஞ்சம் உள்ளே வான்னு சொல்லிட்டு போன சக்ரவர்த்தி, என்ன உனக்கு புரியாத மாதிரி நடிக்கிறியா... மாப்பிள்ளை பார்த்தது என் பொண்ணு பவானிக்கு.. பவுர்ணமிக்கு மாப்பிள்ளை பார்க்க எனக்கு என்ன பைத்தியமான்னு கத்தறார்.

மூத்த பொண்ணு
இல்லைங்க .. மூத்த பொண்ணுக்கு கல்யாணம் செய்துட்டுத்தானே சின்னவளுக்கு கல்யாணம் செய்யணும்னு நினைச்சுத்தான்னு இழுக்க ..நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு, அவ பவானிதான்னு மனசாட்சி இல்லாம பேசறார். பவுர்ணமி வழக்கம் போல இதையும் பொறுத்துக்கறா.

பால்ய நண்பன்
பவுர்ணமி மார்க்கெட்டுக்கு போகையில் பால்ய நண்பன் ராம் பவுர்ணமின்னு கூப்பிடறான். இவனைத்தான் ஒரு நாள் யாருன்னே தெரியாம பவுர்ணமியும், பவானியும் சைட் அடிச்சது. பிறகு ஒரு நாள் பவுர்ணமிக்கு தன்னுடன் படித்த பையன் இவன்தான்னு தெரிஞ்சுருது.

வாயேன் லிஃப்ட்
பவுர்ணமி மார்கெட்டுக்கு போறியா வாயேன்.. நான் லிஃப்ட் தரேன்னு சொல்ல, பவுர்ணமி பேசாம நடக்கறா.. என்ன பவுர்ணமி.. படிக்கும்போது.. பென்சில், ரப்பர்னு நிறைய குடுத்து உதவி செய்வே.. எக்ஸாம் அப்போ கூட உன்னாலதான் நான் பாஸ் பண்ணினேன்..நீ மட்டும் பேசாம போனே இங்கேயே போராட்டம் பண்ணுவேன். என் நன்றி கடனை நீ ஏத்துக்கலைன்னு சொலிட்டுன்னு ராமன் சொல்றான்.

அழகான சிரிப்பு
இதற்கு பவுர்ணமி அழகா சிரிச்சுக்கிட்டு திரும்புறா.. ஒண்ணு பேசு.. இல்லை பேசாம இப்படி அழகா சிரிச்சுகிட்டே வண்டியில ஏறுன்னு சொல்றான். பவுர்ணமியும் வண்டியில் ஏறிக்கறா மார்க்கெட்டில் இறக்கிவிட்டுட்டு, பார்க்கலாம் பவுர்ணமின்னு சொல்லிட்டு கிளம்புறான்.

ராமன்
பவுர்ணமியின் தங்கை பவானி வண்டியில் வந்துகிட்டு இருந்தவளுக்கு திடீர்னு வண்டி ரிப்பேர். உதவி செய்யட்டுமான்னு ராமன் கேட்கறான்.. பவானிதான் ராமனை சைட் அடிப்பவளாயிற்றே.. ஓகேன்னு சொல்றா..அவனும் சரின்னு சொல்லிட்டு கிளம்பறான். அவனையே பார்த்து நிக்கறா பவானி

பவானிக்கா
இப்போ சொல்லுங்க பவானிக்கு அக்கா பவுர்ணமின்னா உயிர். ராமனுக்கும் பவுர்ணமியைத்தான் பிடிச்சிருக்கு.ராமனை பவானிக்கு பிடிச்சுருக்கு. ராமன் பவுர்ணமிக்கா, பவானிக்கா... ஒருவேளை பாவானிக்காக ராமனை விட்டுக் குடுத்துருவாளா பவுர்ணமி. எத்தனை எதிர்பார்ப்புக்கள் இந்த சீரியலில்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications