Kalyana Veedu Serial: அது வாயா.. சுண்ணாம்பு கால்வாயா திருமுருகன்?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கலா வாய் மட்டுமே சுண்ணாம்பு கால்வாய் மாதிரி வெப்பம்..இதுல சகோதரியை அவரை விட அனல் கக்கற மாதிரி பேச சேர்த்திருக்கார்.
ஆமா... திருமுருகன் நீங்க வெறும் படைப்பாளி மட்டும்தானா? உங்க படைப்பை யார் என்ன சொல்றாங்கன்னு காது கொடுத்து கேட்கறதில்லையா?
ஒரு கட்டத்தில் முத்திப் போயி சானல் காரங்க மன்னிப்பு கேட்க சொன்னா மாஞ்சி மாஞ்சி முகத்தை உம்முன்னு வச்சுக்கிட்டு வருத்தம் தெரிவிச்சுப்பீங்க.

காதும் கேட்காதா?
ஸ்வேதா தனது புருஷனோட சந்தோஷமா வாழ போயாச்சுன்னு எத்தனையோ தடவை எழுதினோம். இன்னும் உங்க தோள் மேல அவர் கை போட்ட போஸ்டரை நீங்க மாத்தவே இல்லை. அழிச்சாட்டியம் பண்ணியபடி கலா மூலமா உங்களுக்கும் ஸ்வேதாவுக்கும் இடையில் சந்தேகத் தீயை உண்டாக்கி வச்சு இருக்கீங்க. இருந்தாலும் அந்த போஸ்டர் தப்புதானே? என்ன சொன்னாலும் கண்ணு தெரியாது காது கேட்காதுன்னே இருப்பீங்களா திருமுருகன்?

கலா அண்ட் சிஸ்டர்
கோபி குடும்பத்தில் பெண்ணெடுத்த கலா அண்ட் சிஸ்டர் கோபி குடும்பத்தை கெடுக்க என்ன பேச்சு பேசறாங்க. அவங்க குடும்பத்துல இப்போ ரெட்டிப்பு சந்தோசம் நடக்க போவுதுடி. இது நல்ல நடக்க கூடாதுன்னு கோபி ஸ்வேதாவுக்கு கல்யாணம் நடக்க இருந்த விஷயத்தை கூட ஸ்வேதா புருஷன் கிட்டே சொல்லி வச்சேன். அதுவும் புஸ்ஸுன்னு போயிருச்சுடின்னு அக்கா புலம்ப..

நான்தான் வந்துட்டேன்...
அதெப்படிக்கா போகும்.. நான்தான் வந்துட்டேனே...ஒரு கை பார்த்துக்கலாம். அந்த குடும்பம் சந்தோஷமாவே இருக்க கூடாதுக்கான்னு தங்கை பேசுவதும் காது கொண்டு கேட்க முடியலை.இப்படியா இருப்பார்கள் பெண்கள்.

கேவலமா சித்தரிக்கறதுக்கு
குடும்ப பெண்களை இப்படி கேவலமா அப்பட்டமா சித்தரிக்கறதுக்கு இன்னொரு தடவை வருத்தம் தெரிவிக்க வைக்கணுமா திருமுருகன். அப்போ உங்களுக்கு கண்ணு தெரியும், காது கேட்கும் அப்படித்தானே? ரொம்ப டூ மச்சாத்தான் போறீங்க... உங்களுக்கு கடிவாளம் போட்டாத்தான் சரிவரும்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications