Pandian stores serial: என்ன பிரச்சனை இவளுக்கு.. அதையே கேட்டுகிட்டு இருக்கா...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு மனைவி கணவன்கிட்டே உங்களுக்கு குழந்தைங்கன்னா பிடிக்குமான்னு கேட்டா அதுக்கு என்ன அர்த்தம்?

இது புரியாம என்ன பிரச்சனை இவளுக்கு...அதையே கேட்டுகிட்டு இருக்கான்னு ஒரு புருஷன் சொல்றான்...

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரப்போகும் எபிசோட் இது.

குழந்தைகளும் இல்லை

குழந்தைகளும் இல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்னதான் வில்லன் வில்லி இல்லைன்னாலும்.. இதுவரைக்கும் குழந்தைகளும் இல்லைங்க. மூத்த அண்ணன் தம்பிங்களை குழந்தைங்களா நினைச்சுகிட்டு இருந்ததால இதுவரைக்கும் குழந்தைங்க பத்தி நினைச்சுப் பார்க்கலை...

அம்மா ஸ்தானத்தில்

அம்மா ஸ்தானத்தில்

மூத்த அண்ணி தனமும் அம்மா ஸ்தானத்தில் இருந்து கொழுந்தன்களை பார்த்துகிட்டு இருந்ததால, தனக்கு குழந்தை பாக்கியம் வேணும்னு நினைச்சு கூடப் பார்க்கலை. கடைக்குட்டி கண்ணன் இப்போ கல்லூரி படிக்கறான். அவன் அந்த வீட்டில் கடைசியா குழந்தையா தவழ்ந்ததோட சரி.

மீனா முழுகாமல்

மீனா முழுகாமல்

இரண்டாவது மருமகள் மீனா முழுகாமல் இருப்பதாக காண்பிச்சாங்க. இதனால் வீடே சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் அவளுக்கு லேசா பிளீடிங் ஆகுதுன்னு சொல்லி எல்லாரும் கலக்கத்தில் இருந்தாங்க. அழுதுகிட்டும் இருந்தாங்க. ஒண்ணும் ஆகி இருக்காதுன்னு தெரிஞ்சு சந்தோஷத்திலும் இருந்தாங்க.

கதிர் முல்லை

கதிர் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸின் அண்மை கால கதையே முல்லை கதிரை வச்சுத்தான் ஓடிக்கிட்டு இருக்கு. இப்போதும் ராத்திரி படுக்கைக்கு வர்றான் கதிர். முல்லை உங்களுக்கு குழந்தைங்கன்னா பிடிக்குமான்னு கேட்கறா. என்ன கேள்வி இது.. குழந்தைங்கன்னா யாருக்குத்தான் பிடிக்காதுன்னு கேட்கறான் கதிர்.

ரொம்ப பிடிக்கிறது வேற

ரொம்ப பிடிக்கிறது வேற

இல்லைங்க பிடிக்கறது வேற.. ரொம்ப பிடிக்கறது வேறன்னு கேட்கறா முல்லை. ரொம்ப பிடிக்கும்னு சொல்றான் கதிர். அப்படியா..அப்போ உங்களுக்கு குழந்தைங்கன்னா பிடிக்கும்னு சொலிக்கறா முல்லை. என்ன உனக்குத் தூக்கம் வரலையா? என்னை பத்தி ஏதாவது கரடு முரடா யோசிச்சியான்னு கேட்கறான்.

தூக்கம் வரலேன்னு

தூக்கம் வரலேன்னு

ஆமாங்க ...தூக்கம் வரலேன்னு சொல்ற முல்லை.அப்போ உங்களுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். நல்லா பார்த்துப்பீங்க இல்லேன்னு கேட்கறா...ஆமாம் பேசாம படுன்னு சொன்ன கதிர்.. என்னாச்சு இவளுக்கு அதையே கேட்டுகிட்டு இருக்கான்னு தனக்குள் பேசிக்கறான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+