Naam Iruvar Namakku Iruvar Serial: அடச் சே... அது லிப்லாக் இல்லையா மாயன்?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனும் தேவியும் லிப் லாக் சீனில் இருக்காங்கன்னு பார்த்தால்... தூணுக்கு மறைவில் போன இவங்களுக்குள்ள லிப்லாக் இல்லையாம்.
Recommended Video
இந்த பக்கமா வந்து லிப்சை துடைச்சுகிட்ட மாயன் சொல்றான் ஆனால், நம்பும்படி இல்லை... பட் சீனை போட்டு காண்பிச்சாங்க பாருங்க... அடச் சேன்னு சொல்லறமாதிரி ஆகிருச்சு.
மாயன் கை காலை நீட்டி குழந்தை மாதிரி அழலேன்னாலும்.. அப்படி நடந்தும் சும்மா கின்னுன்னு நிக்கறான் பாருங்க.. நம்ம பையன் மானஸ்தன்.. அதை சொல்லணும்.

ஏங்க ஒன்னே ஒன்னு
மாயனும் தேவியும் தாமரைக்கும், அரவிந்துக்கும் முதலிரவை நடத்தி முடித்துவிட்ட திருப்தியில் இருக்காங்க. அப்போ மாயனுக்கு ரொமான்ஸ் மூட் வந்துருது. வீட்டின் முற்றத்தில் தூண் இருக்குமே...அதுக்கு நடுவில் இருவரும் நிக்கறாங்க.அப்போ பார்த்து ஏங்க.. ஒன்னே ஒன்னுன்னு கேட்கறான். ஒன்னுதானே.. சரிடா.. கிட்ட வான்னு கூப்பிடறா தேவி.

தூண் மறைவில்
தூண் மறைவில் முகத்தை வச்சுக்கிட்டு, இப்படி வச்சுக்கலாமான்னு கேட்கிறான் மாயன். சரிடா என்று சொன்ன தேவி தானும் முகத்தை தூண் மறைவுக்கு கொண்டு வருகிறாள். நமக்கும் கேமிரா ஷாட் தூணுக்கு மறைவில் வைக்கறாங்க. மாயன் உதட்டை துடைச்சுக்கிட்டு நான் ரெடிங்கன்னு சொல்றான்.

இந்தப்பக்கம் அந்தப்பக்கம்
நிமிஷ நேரம் கூட இல்லைங்க.. தேவி அந்தப்பக்கம் போயிட. மாயன் இந்தப்பக்கம் திரும்பி உதட்டைத் துடைச்சுக்கறான். சரி.. பையன் வெயிட்டா வாங்கிட்டான் போலன்னு நினைச்சால், குண்டைத் தூக்கிப் போடறான். என்ன நீங்க நினைச்ச மாதிரி ஒன்னும் இல்லைன்னு வேற கேமிராவைப் பார்த்து சொல்றான்.

சரி என்னதாண்டா
சரி என்னதாண்டா நடந்துச்சுன்னு கேட்டா.. கேமிரா ரீவைண்ட் பண்ணுங்கன்னு சொல்லி... அப்போ இருவரும் நெருங்கறதை காமிக்கறாங்க. கிட்டே வந்த தேவி மாயநின் உதட்டருகில் போயி பன்னீர் தெளிக்கற மாதிரி தூன்னு எச்சிலைத் தெளிச்சுட்டா. அதேன்.. பய புள்ள உதட்டைத் துடைச்சு இருக்கான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications