மாமியார் கண்களில் விரலை விட்டு ஆட்டறதுன்னா இதுதானா!
சென்னை: சன் டிவியின் மதிய நேர சீரியலான சந்திரலேகாவை நிறைய பெண்கள் விரும்பி பார்க்கறாங்க.
தம்பி பொண்டாட்டிக்கும், தனக்கும் ஒரே சமயத்துல குழந்தை பிறக்குது. ரெண்டும் பெண் குழந்தைங்க. சூழ்நிலையால் குழந்தை மாறிப் போயிருது.
இந்த விஷயம் அக்காவுக்கு மட்டும்தான் தெரியுது. தம்பி பொண்ணை அக்கா நல்ல பொண்ணா வளர்க்க, அக்கா பொண்ணை தம்பி நல்ல பொண்ணா வளர்க்கலை.

நடுவுல
சந்திராவா நடிக்கற பொண்ணு ரெட்டை வேஷத்துல நடிச்சுருக்கு. நிலான்னு படிக்காத பொண்ணா இருந்து, பணக்கார வீட்டுக்கு மருமகளா ஆயிருது. இந்த பொண்ணை துரத்திட்டு, தனக்கு பிடிச்ச அஞ்சலியை மருமகளாக்க துடிக்கறாங்க நிலாவின் மாமியார்.

முதலிரவு
அத்தையோட வெஞ்சன்ஸ்ல இன்னும் நிலாவுக்கு,திருவுக்கும் முதலிரவு நடக்கவே இல்லை. இன்னிக்கு நடக்கலாம்னு திட்டமிட்டா அதை கெடுக்க அஞ்சலியும், அத்தையும் சதி செய்துருவாங்க.. முதலிரவு நின்னு போயிரும்.

சரியில்லை
இன்னிக்கும் நடக்க கூடாதுன்னு திட்டம் போட்ட அத்தை, உடம்பு சரி இல்லாத மாதிரி நடிச்சு, இரவு முழுக்க மாத்திரை மருந்து முழிச்சிருந்து கொடுக்கணும்னு நிலாவை தன் கூட இருக்க சொல்றாங்க. நிலாவுக்கு வேலைக்காரி உண்மையை சொல்லிட,நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு அத்தை ரூமுக்கு வர்றா.

குடலு வெளியில
நல்லா தூங்கற மாதிரி நடிச்ச அத்தையை முகத்துல தண்ணி தெளிச்சு எழுப்பறா. ஏண்டி எழுப்பறதுக்கு என்ன, தண்ணியா தெளிக்கறன்னு அத்தை கேட்க.. நான் எழுப்பினேன் அத்தை.. நீங்கதான் எந்திரிக்கலை ..அதான் லேசா தண்ணி தெளிச்சேன். மருந்து முக்கியமாச்சே அத்தைன்னு சொல்றா.

மருந்து இது
என்ன மாத்திரை இது...ரெண்டு குடுக்கறேன்னு அத்தை கேட்க.. டாக்டர் குடுத்த மாத்திரைதான் அத்தை. உங்களுக்கு சந்தேகமா இருந்தா நான் ரூமுக்கு போறேன்.. நீங்க அஞ்சலியை வச்சு பார்த்துக்கோங்கன்னு சொல்றா.இல்லை இல்லை குடுன்னு சொல்றாங்க.

என்ன
அத்தை என் மடியில் படுத்துகோங்க..நான் இந்த டானிக்கை வாயில ஊத்தறேன்.. சமத்தா குடிச்சிருங்கன்னு சொல்றா... இது என்ன பாட்டில் மருந்து.. இதையும் டாக்டர் குடுத்தாங்களான்னு கேட்க.. அத்தை என்னை நம்ப மாட்டீங்களான்னு கேட்டு, மடியில படுக்க வச்சு, டானிக்கை வாய் நிறைய ஊத்தி கட்டாயமா வாயை மூடி முழுங்க வைக்கறா.

வாந்தி
அதை குடிச்ச உடனே குமட்டல், வாந்தி வருது. ஏய் நிலா நிஜமா சொல்லு. டாக்டர் எழுதிக் குடுத்த மருந்துதான் குடுத்தியான்னு அத்தை கேட்கறாங்க. அத்தை நிஜமா உடம்பு சரியில்லாம இருந்தாதான் மருந்து மாத்திரை எல்லாம்... நடிக்கறவங்களுக்கு எதுக்கு அத்தை. அதனாலதான் ரெண்டு பேதி மாத்திரை, கசப்பு வாந்தி மருந்துன்னு குடுத்து இருக்கேன்.

புடுங்கிக்கும்
ஒண்ணும் பண்ணாது அத்தை ஒரு வாரத்துக்கு வயித்தால புடுங்கிக்கும். அப்போ உங்க வயிறு எரிஞ்சு, புண்ணாகி சுருங்கி போயிரும். இந்த மருந்து இருக்கே அது என்ன வேலை செய்யும் தெரியுமா, வாந்தியா வந்து லேசா குடலும் வெளியில் வந்துரும்.. அவ்ளோதான் அத்தை.. உங்களை மாதிரி நான் விஷம் எல்லாம் தரலை.. நாளைக்கும் உடம்பு சரி இல்லேன்னா அப்புறம் அதை பத்தி யோசிக்கறேன்னு சொல்றா..
இப்படியும் மாமியார் கண்ணுல விரலை விட்டு ஆட்டறாளே இந்த படிக்காத மருமக..சபாஷ்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications