Pandian Stores Serial: இதெல்லாம் குடும்பத்துல சகஜமப்பா...!
சென்னை: புதுமண தம்பதி என்றால் அவர்களுக்குள் நடக்கும் ஊடல் இருக்கிறதே...இதெல்லாம் குடும்பத்தில் சகஜமப்பா என்று அவரவர் கூறும்படி இருந்தாலும், ரொம்ப சுவாரஸ்யமானதாக இருக்கும். இதில் புருஷன்தான் எக்ஸ்ட்ராவா ஊடலுக்கு வழி வகுத்து தருவான்.
தன்னை நம்பி தனது வீட்டுக்கு வந்து இருக்கும் பெண்ணை, சீண்டி பார்ப்பதில் அலாதி ஆர்வம் இருக்கும் கல்யாணமான புது பசங்களுக்கு. மனைவி மனம் விட்டு பேசாத தருணமாக வேறு அது இருக்கும்.இதுதான் சாக்கு என்று மனைவியை சீண்டும் களத்தில் குதித்து விடுவார்கள்.
கதிர், சிங்கப்பூரில் இருந்து அக்கா வர்றாங்களா...அப்போ பாப்பாவும் கூட வரும். அப்பா.. எத்தனை நாளாச்சு பாப்பாவைப் பார்த்து...அவளுக்கு வேற என்னைத்தான் ரொம்ப பிடிக்கும் என்று தனக்குத்தானே புலம்பி பில்டப் கொடுக்கிறான் கதிர்.

பாப்பா அழகா
காலையில் இருந்து கதிரின் இந்த அலப்பறையை பொறுக்க முடியாத முல்லை...ஏங்க..பாப்பா ரொம்ப அழகா என்று ஒரு ஆற்றாமையில் கேட்டுவிட்டாள். அவ்வளவுதான் கதிர் பாப்பாவை வர்ணிக்கிறான். அவள் தன்னிடம் எப்படி பேசுவாள் என்று கதை கதையாக சொல்கிறான்.

சீ இந்த மனுஷனிடம்
சீ இந்த மனுஷனிடம் போயா கேட்டோம்..ஒரேயடியா பேசறாரே என்று நொந்து போகிறாள் முல்லை. வரட்டும் அந்த பாப்பா எப்படித்தான் இருக்குதுன்னு நானும் பார்க்கறேன்னு நினைத்துக்கொண்ட முல்லை, அவர்கள் வருவதை எதிர்பார்த்து, ஹாலில் நிற்கிறாள்.

கார் சத்தம்
கார் சத்தம் கேட்க, முல்லையும் ஆவலாக வாசலைப் பார்க்கிறாள், அங்கு ஏற்கனவே தனம், மூர்த்தி மாமா, ஜீவா, மீனா என்று நிற்கிறார்கள். பின்னாலிருந்து வேகமாக வந்த கதிர், முல்லை நிற்கிறாள் என்று கூட பார்க்காமல், அவளின் தோள்பட்டையை ஒரு இடி இடித்துவிட்டு, வேகமாக வாசலை நோக்கி போகிறான்.

இப்படி போறாகளே
ஒரு சுற்று சுற்றி பின்னர் நின்ன முல்லை, என்ன இவுக... நான் நிக்கறது கூடாது தெரியாம இப்படி இடிச்சுட்டு போறாக.. அப்படி என்ன என்னைவிட பாப்பா உசத்தியா...எப்படித்தான் இருப்பா அந்த பாப்பா என்கிற கோவத்திலும் கூட வாசலை நோக்கி மும்முரமாகப் பார்க்கிறாள். கடைசியில் அது அக்காவின் மகள் குட்டி பாப்பாங்க!
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications