Bigg Boss 3 Tamil: சரவணனை சத்தமில்லாமல் வெளியில் அனுப்பியது சரியா?
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னென்னமோ நடக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் ஹாசன் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அதுக்காக இப்படியா?
கவிஞர் கண்ணதாசனே தன்னை புரிந்துகொண்டு செய்த தவறுகள் ,பட்ட கஷ்டங்களை பற்றித்தான் போதனை அதாவது தத்துவ பாடல்கள் எழுதினார். அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார்.
நம்ம தாத்தா காந்திஜி செய்யாத தவறுகள் இல்லை என்பது போல எல்லாத்தையும் சொல்லிட்டுத்தான் திருந்தி சத்திய சோதனைக்கு ஆளாகி . சத்திய சோதனை புத்தகம் எழுதினார்.

சரவணன் அனுபவங்கள்
நடிகர் சரவணன் பிக் பாஸ் ஹவுஸ் மேடாக இருந்த போது, கல்லூரி காலத்தில் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே போயிருக்கேன் என்று உண்மையை சொல்லிட்டார்.அது தவறுதான் .ஆனால், அவர் உண்மையை சொன்னது தவறில்லை. அதனால்தான் பிக் பாஸ் மறுநாள் அவரை அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூற, இது மாதிரி யாரும் செய்ய கூடாதுன்னு அதை அப்போது சொன்னேன்.இருந்தாலும் அப்போது செய்த தவறுக்கு இப்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

சிறந்த பண்பு
ஒரு தவறை செய்துவிட்டு, அதை தானே வாய்விட்டு சொல்லியும் மன்னிப்பு கேட்டது அவரது நல்ல பண்பைத்தானே குறிக்கிறது. எந்த பண்பாட்டில் வளர்ந்திருந்தாலும், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது என்பது நல்லதொரு பன்ண்பைத்தானே குறிக்கிறது. இதற்காக சரவணனை வெளியே அனுப்ப வேண்டிய கட்டாயம்தான் என்ன? மனிதர்கள் வாழும் வீடுதான் பிக் பாஸ் ஹவுஸ். அப்படியானால், மன்னிப்பது மனிதத் தன்மைதான் சரவணனை மன்னித்து விட்டு இருக்க கூடாதா? அவ்வளவு பெருந்தன்மை இல்லாதவரா பிக் பாஸ்?

மாதிரி சத்தமின்றி
அதென்னங்க சத்தமில்லாமல் திருடன் மாதிரி அவரை வெளியில் அனுப்பறீங்க? எப்பவோ செய்த தவறு, இன்னமும் பேருந்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் முக்கால் வாசி பேர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க கூட நேரமின்றி உழைத்துக் கொண்டு இருப்பார்கள். அதாவது தண்ணி அடிச்சுட்டு ஒரு ஓரத்தில் கிடப்பார்கள். அவர்கள் திருந்தவா நீங்க சரவணனை வெளியில் அனுப்பினீர்கள்?

தவறில்லை விதம்தான்
பார்க்க போனால் வெளியில் அனுப்பியது கூட தவறில்லைங்க. ஆனால், திருடன் மாதிரி அவரை யாரிடமும் மனம் விட்டு பேச கூட நேரமின்றி அனுப்பி வைத்தது மாபெரும் தவறு. அவரது கருத்தை உள்ளே வீட்டில் சொல்லிவிட்டு போனால்தானே அவரது இரண்டு மனைவிகளுக்கு அவர் மேல் மரியாதை வரும். வீட்டில் சற்று நேரம் பேசவும், மனைவிகளிடம் தன்னிலை விளக்கம் தரவும் பிக் பாஸ் ஹவுசில் பிக் பாஸ் அனுமதி தந்திருக்க வேண்டும்.
தூக்குமேடை ஏறுகிறவனுக்கு கூட கடைசியில் பேச வாய்ப்பு தர்றாங்க தெரியுமா பிக் பாஸ்?












Click it and Unblock the Notifications