Nila Serial: வயசு பொண்ணு இந்த டயலாக் பேசினா நல்லாவா இருக்கு?
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலா கதாபாத்திரம் நான் கல்யாணம் பண்ணிக்க கூடாது.. தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்க கூடாதுன்னு நீலாம்பரி நினைக்கறான்னு தினம் தினம் டயலாக் பேசறா.
வயசுப் பொண்ணு.. இந்த டயலாக் பேசினால் முகம் சுளிக்கற மாதிரி இல்லை.
வர வர இந்த டிவி சீரியல்கள் நம்ம பண்பாடுகளை காற்றில் பறக்க விட்டு விடுகின்றன.

நிலா நீலாம்பரி
நிலாவுக்கு நீலாம்பரி எதிரியும். ஒரு வகையில் நீலாம்பரிதான் நிலாவுக்கு மாமியாரும் ஆகப் போகிறவர். நிலாவுக்கு கல்யாணம் ஆகக் கூடாது, அவளை அதற்குள் கொன்னுடனும்னு சதி செய்யும் பெண் நீலாம்பரி. ஆனால், இதை முறியடிச்சு கல்யாணம் செய்து காமிக்கணும்னு போராடுகிறாள் நிலா.

தாம்பத்ய வாழ்க்கை
சதியை முறியடிக்கும் ஒவ்வொரு நிலையிலும்தான் நிலா நான் கல்யாணம் செய்துக்க கூடாது. தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்க கூடாதுன்னு நினைக்கறா நீலாம்பரி. அதை முறியடிச்சு நான் கல்யாணம் செய்துக்குவேன் என்று சொல்லி தாம்பத்ய வாழ்க்கை அனுபவிப்பேன் என்று ஒரு வயசு பொண்ணான நிலா போடும் சவால்தான் கதை.

எத்தனையோ விஷயம்
ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை வேணாம்னு தூக்கி நீலாம்பரி கிட்டே கொடுத்துட்டு வந்துட்டாங்க நிலா குடும்பம். இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லையாம். நீலாம்பரி கல்யாணம் செய்துக்க விட மாட்டேன்னு சொல்றதும், தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்க விட மாட்டேன்னு சொல்றதும்.. இப்படி வயசை கடந்த நீலாம்பரி கூட ஒரு முறைதானே சொன்னாங்க.

பலவித சவால்கள்
நான் கல்யாணம் செய்துக்குவேன்.. தாம்பத்ய வாழ்க்கை அனுபவிப்பேன்னு நிலா சொல்றது பல எபிசோடுகளாக நீண்டுகொண்டு இருக்கிறது. அந்த கல்யாணமும் உடனடியாக நடந்த பாடில்லை. தினம் தினம் இந்த டயலாக் மட்டும் பேசிக்கிட்டே இருக்கு இந்த பொண்ணு..
முகம் சுளிக்க வைக்கும் இந்த டயலாக்குக்கு முற்றுப்புள்ளி வச்சு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி வைங்கப்பா அந்த வயசுப் பொண்ணுக்கு!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications