Aranmanai Kili Serial: அரண்மனை கிளி கதையை ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டே எழுதி இருப்பாய்ங்களோ!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ரேணு பார்ட்டி வைக்கறதும்... செம காமெடியா இருக்குங்க.
அதை விட ஜானு அதை மாற்ற சாமி வந்த மாதிரி ஆடி அவங்களை விரட்டி அடிக்கறதும்.. ரொம்பக் காமெடியா இருக்கு.
அரண்மனை கிளி சீரியல் கதையை ஜாலியா ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கிட்டே எழுதிட்டு போயிடலாம் போலிருக்கே!

மீனாட்சி அம்மா
அரண்மனை கிளி சீரியல் கதை என்று நடிகை பிரகதியை கம்பீரமான மீனாட்சி அம்மா என்று காண்பித்து, ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு போட்டியாக களம் இறக்கினார்கள். கடைசியில் கம்பீரத்துக்கு ஏற்ற ஒரு கதையும் இல்லை.

கதையில் ஜானுதான்
கதையில் ஜானுவை அரண்மனை கிளி என்று காண்பித்து கொண்டு போனார்கள். கதை முழுக்க சப்பு சப்புன்னு இருக்கு. அக்காவும், தங்கையும் மீனாட்சி அம்மா வீட்டுக்குள்ளே மருமகளா போய்ட்டு, இதை மீனாட்சி அம்மா ஏத்துக்காததும். கால் நடக்க முடியாத அர்ஜுனை நடக்க வைக்க ஜானு போராடுவதும்தான் கதை.

சீரியல் முழுக்க
ஒரு குடும்பத்தில் இருக்கும் 7 பேர்.. இந்த 7 பேருக்குள் 3 பேர் சதிகாரர்கள் வேற..இவர்களை சுற்றி மட்டுமே நகரும் உப்பு சப்பற்ற கதை. அக்கா குடும்பத்துக்கு எதிராக நடக்கிறாள். தங்கை குடும்பத்துக்கு ஆதரவாக அக்காவையே எதிர்க்கிறாள். மாசக் கணக்கா இவளை மீனாட்சி அம்மா மருமகளா ஏத்துக்காமயே இருக்காங்க இதுதான்.. இது மட்டும்தான் கதை.

கதைக்கு மெனக்கெடல்
கதைக்கு சுத்தமா ஆசிரியர் மெனக்கெடவே இல்லைங்க. இதில் ஆர்ட்டிஸ்ட் ரொம்ப டெடிகேஷனா நடிச்சு இருக்காங்க. நடிகை பிரகதி இளமையோடு அழகாக இருக்கிறார்.அவரை நல்லா பயன்படுத்திக்காம இப்படி வேஸ்ட் பண்றாங்களே..
ஆர்ட்டிஸ்ட் வேல்யூ தெரியலை... என்னத்தை சொல்ல?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications