Pandian Stores Serial: நவம்பர் 26 இப்போத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸில் வருது போல...!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் பிறந்தநாள் நவம்பர் 26 ஆம்.. அந்த நாள் இன்னிக்குத்தானாம்.
கதிர் வாழ்த்து சொல்லுவானான்னு முல்லை எதிர்பார்த்து காத்து இருக்கா... என்ன பரிசு கொடுக்கலாம்னு கதிர் யோசிக்கறான்.
கடையில எல்லாரும் கதிருக்கு பதில் என்ன பரிசுன்னு யோசிக்கறாங்க...ஒரு மாதிரி திரைக்கதை வெள்ளந்தியா நல்லா போகுது.

அண்ணனிடம் சொல்வது
ஆனந்தம் பட பாணியில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை இருக்குது. மூத்த அண்ணன் பாண்டியன் தனம் குழந்தை பெத்துக்காமல் இருக்கறது இந்த காலத்துக்கு சற்றும் பொருந்தாத கதை என்றாலும் நெஞ்சை நெகிழ வைக்கும் கதைதான். இரண்டாவது அண்ணனின் மனைவி மீனா முழுகாமல் இருப்பதை வைத்து பெரிய அண்ணியை அம்மா திட்டுவதை பொறுக்காமல் அண்ணனிடம் சொல்லிவிடுகிறான் கடைக்குட்டி கண்ணன்.

கண்ணன் கடையில்
கடைக்கு வந்த கண்ணன் அண்ணே உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்னு சொல்றான். என்னடா சொல்லுன்னு கேட்கறார் அண்ணன். திடீர்னு அவன் ஒண்ணும் இல்லே.. வீட்டுக்கு போ.. அண்ணி உன்கிட்டே சொல்லுவாங்க அப்படீன்னு சொல்றான். இவன் ஒருத்தனன்னு சலிச்சுக்கிட்டு வீட்டுக்கு போறார்.

அங்கும் கண்ணன்
வீட்டுக்கு வந்து அண்ணன் சாப்பிட உட்காருகையில் தனம்..இன்னிக்கு முல்லைக்கு பிறந்த நாளாம். அந்த புள்ள..யாருகிட்டேயும் சொல்லலை. கதிர் சொல்லிக்கிட்டு இருந்தான்.முல்லையை போயி பார்த்து கூப்பிட்டுக்கிட்டு வரணும்னு சொல்றார். அதுக்குள்ளே கண்ணன் வந்துட.. என்னடா அதுக்குள்ளே வந்துட்டன்னு கேட்கறார். பசிக்குதுண்ணே..அதன் வந்துட்டேன்னு சொல்லிகிட்டே.. அண்ணே ..இன்னிக்கு அம்மா அண்ணியை திட்டிட்டாங்கன்னு சொல்றான்.

அதெல்லாம் இல்லை மாமா
அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா. டேய் கண்ணா நீ சாப்பிடுன்னு தனம் சொல்ல. தனம் நீ சும்மா இரு.. நீ சொல்லுடா கண்ணா. அதான் கடையிலிருந்து ஏதோ சொல்ல சொல்ல வந்து இருக்கான், நீ சொல்லுடா கண்ணான்னு அண்ணன் சொல்றார். மீனா அண்ணி தடுக்கி விழப் போனாங்கன்னு அண்ணியை அம்மா திட்டுச்சுன்னு சொல்றான் கண்ணன்.

அம்மா தனத்தை
அம்மா தனத்தை திட்டினிங்களா .. மீனாவை தனம் எப்படி பார்த்துக்கறான்னு உங்களுக்கு தெரியாதா? நீங்க எப்படி தனத்தை பார்த்துக்கறீங்களோ அப்படித்தானே வீட்டுக்கு வந்தவங்க பார்த்துக்குவாங்கன்னு மகன் கேட்க... ஏதோ பதட்டத்துல பேசிப்புட்டேண்டா.. மனசுல எதையும் வச்சுக்காதே தனம்னு மாமியார் சொல்றாங்க..

குடும்ப சந்தோஷத்துக்கு
இப்படி போகுது குடும்ப உறவுகளின் அன்றாட நிகழ்வுகள். ஒரு உரசல்கள் இல்லை. கதிர் முல்லை எப்போது சேருவார்கள், சந்தோஷமாக இருப்பார்கள் என்று குடும்பமே எதிர்பார்த்து காத்து இருக்கிறது. அவர்களின் சந்தோஷத்துக்கு முல்லையின் இந்த பிறந்த நாளை பயன்படுத்திக்க புறப்படுகிறார் மூத்த அண்ணன்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications