புடவையில் சிக்கென்று ஜாக்லின்.. எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இப்போது சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை ஜாக்லின் இணையதளத்தில் விதவிதமாக போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார் அதை பார்த்து ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
விஜய் டிவியில் அறிமுகமான நாளிலிருந்தே ஜாக்குலினை ரசிகர்களும் சக நடிகர்களும் கலாய்த்து கொண்டிருந்தார்கள். தற்போது இணையதளத்தில் இவருடைய அழகை பார்த்து ரசிகர்கள் உருகி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.
புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப் படுத்துவதிலும் , கவர்ச்சிகரமாக இருக்கிறது என்றும் அதில் பேசும் பேச்சுகள் இரட்டை அர்த்தத்தில் இருக்கிறது என்றும் விஜய் டிவிக்கு ரசிகர்களிடம் ஒரு பெயர் இருக்கிறது.

விஜய் டிவியின் தயாரிப்பு
இந்த டிவியில் பணியாற்றினாலே அவர்களுக்கு நல்ல எதிர்காலமும் இருக்கிறது என்பது அனுபவ உண்மையாக மாறிவிட்டது. இந்த டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பலர் இன்று முன்னணி நடிகர்களாக கலக்கி கொண்டிருக்கும் போது சில கதாநாயகிகளும் இந்த டிவி சீரியல்களில் நடித்து இன்று வெள்ளித்திரையில் மின்னிக் கொட்டி இருக்கிறார்கள்.

கலக்கிய ஜாக்லின்
அந்த மாதிரி தான் நம்ம ஜாக்லின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். அவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது தனது தந்தையை இழந்து தனது தாயால் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். அம்மாவின் மீது ரொம்ப பாசம் வைத்திருந்தாலும் அப்பாவை அவர் ரொம்பவே மிஸ் பண்ணுகிறார். தனக்கு தாய் மட்டுமே இருக்கும் நிலையில் தன்னுடைய குடும்பமாக விஜய் டிவியை தான் அவர் கூறுகிறார். இந்த டிவியில் தான் இவருக்கு உறவுகள் அதிகமாக இருக்கிறதாம்.

குரல் வளம்
தனது திறமையான பேச்சால் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அவரது குரலை, இவரை எல்லோரும் கிண்டல் பண்ணினாலும் இவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவரது குரலுக்கு அவர்தான் முதல் காதலராம். தொகுப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்னரே விஜய் டிவியில் கனாக்காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர். அதேநேரத்தில் கலக்கப்போவது யாரு சீசன் 5 புதிய தொகுப்பாளரை தெரிவுசெய்ய ஆடிசன் நடத்தப்பட்டது. இதில் ஜாக்லின் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டார்.

நடிப்பிலும் பாய்வோம்ல
விசுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கும் இவர் ஏர் ஹோஸ்டஸ் வேலை பார்த்திருக்கிறார். வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு ஆண்டாள் அழகர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் தேனு அக்கா தேன்மொழி ஆக நடித்திருப்பார். இப்போ விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பிஏ சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவர் காமெடி கதாநாயகியாக குழந்தைத்தனமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

குழந்தைத்தனம் ஜாஸ்திதான்
இது முழுவதும் இவருக்கு பொருந்தும் கேரக்டரில் இருக்கிறது. அதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சீரியலுக்காக எடுக்கப்பட்ட சேலை கட்டி எடுக்கப்பட்ட போட்டோக்களை இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக அழகாக இருக்கிறீர்கள்.

சேலையில் அம்சமாக இருக்கிறார்
சேலையில் சொக்க வைக்கிறீர்கள்.. சூப்பராக இருக்கிறீர்கள்.. தேவதையின் அழகில் இருக்கிறீர்கள் என்றெல்லாம் ஏகத்துக்கு அழகை புகழ்ந்து கமெண்ட் போட்டு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். வாயாடி பெண்ணாக இருந்தாலும் சேலை கட்டிக்கொண்டு இவர் போட்டிருக்கும் போட்டோஸ்கள் பார்ப்பதற்கு அழகாகத் தான் இருக்கிறது.. என்னதான சொல்லுங்க நம்ம ஊர்ப் பொண்ணுங்களுக்கு சேலைதாங்க அம்சம்!
-
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே












Click it and Unblock the Notifications