• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"பப்ளிமாஸ்" ஜாக்குலினுக்குள் இவ்வளவு திறமையா.. வாயடைத்துப் போன ரசிகர்கள்...!

|

சென்னை: இப்ப இருக்கிற சூழ்நிலையில சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்றிருப்பவர்கள் அதிகமாகி இருக்காங்க. தொகுப்பாளராக இருந்து சின்னத்திரையில் கதாநாயகிகளின் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பதித்து இருக்கவங்க தான் நம்ம ஜாக்குலின்.

எல்லாருக்குமே ஒரு பொதுவா ஒரு குணம் உண்டு. நாம மட்டும் யாரை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கலாய்த்து கொள்ளலாம். ஆனால் நம்மளை அடுத்தவர்கள் முன்னாடி யாரு கிண்டல் பண்ணினாலும் பொறுத்துக்க முடியாது.

ஆனா நம்ம ஜாக்லின் அப்படி யாராவது கலாய்ச்சா அசட்டுத்தனமாக சிரிச்சுக்கிட்டு ஜாலியா எடுத்துக்கிட்டு போய் கொண்டு இருக்கிறார். அதுதான் அவரோட பலமே.

குஷ்பு இட்லின்னா.. ரக்ஷாவுக்கு லட்டு கன்னம்.. உருகும் ரசிகர்கள்!குஷ்பு இட்லின்னா.. ரக்ஷாவுக்கு லட்டு கன்னம்.. உருகும் ரசிகர்கள்!

விஜய் டிவி ஜாக்குலின்

விஜய் டிவி ஜாக்குலின்

புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தங்களுடைய சேனல்களின் ரேட்டிங்கை அதிகப்படுத்துவதில் எல்லா சேனல்களும் மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது விஜய் டிவி தொலைக்காட்சி. திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை பிரபலப்படுத்திய பெருமை விஜய் டிவியை சேரும்.

மனசில் பதிந்த ஜாக்குலின்

மனசில் பதிந்த ஜாக்குலின்

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் கதாநாயகர்கள், கதாநாயகிகள் அதிகம். அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பிடித்தவராக மாறினார் ஜாக்குலின். நம்ம ஜாக்குலின் பக்கா சென்னை பொண்ணு.

 சென்னைக்கார பொண்ணு

சென்னைக்கார பொண்ணு

சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் கரசில் படித்துக்கொண்டிருக்கும்போது படங்களில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார். விஜய் டிவில VJ ஆகும் முன்னரே அந்த சேனலில் ஒளிபரப்பாக பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களில் நடித்தவர். VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களுக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என விதியை மாற்றி தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர்.

 ரக்சனுடன் தொகுப்பு

ரக்சனுடன் தொகுப்பு


கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் 5 வது சீசனில் தொடங்கி 7வது சீசன் வரை அந்த நிகழ்ச்சியை ரக்சன் உடன் இணைந்து தொகுத்து வழங்கினார். வேற அதில் அனைவரையும் கலாய்த்து இவரை யாராவது கலாய்த்தால் அசட்டுத்தனமாக சிரிப்பது என செம ஜாலியாக அந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. இவரை கலாய்க்காத பலங்களே இல்லை.

 என்னை கலாய்ங்கப்பா

என்னை கலாய்ங்கப்பா

தாடி பாலாஜி தொடங்கி கோபிநாத், மாகாபா என அனைவரும் ரவுண்டு கட்டிக் கொண்டு வருவார்கள். ஆனால் அதை எல்லாத்தையுமே ஜாலியாக எடுத்துக் கொண்டு விஜய் டிவியில் வாழு பெண்ணாக வலம் வந்தார் .இப்போது ஜாக்லின் ரொம்ப ரொம்ப பிஸி . அதோடு விட்டுவிடவில்லை, வெள்ளித் திரையில் தன்னுடைய காலெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார். நயன்தாரா உடன் கோலமாவு கோகிலா படத்தில் தங்கையாகவும் நடித்து பெரிய திரைக்கும் முகத்தை காட்டி விட்டார்.

 தனி அழகு

தனி அழகு

மேக்கப்பில் சற்று வித்தியாசமாக தெரியும் ஜாக்குலின் உண்மையில் டஸ்கி ஸ்கின் மிகவும் அழகாக இருப்பார். கல்லூரி காலங்களில் அவர் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் செம வைரல் ஆகியுள்ளன. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ என்ற சீரியல் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஊராட்சி மன்ற தலைவராக நடித்துள்ளார் இந்த சீரியலில் இவர் காமெடியான அழகான மருமகள் ஆகவும் நடித்திருக்கிறார்.

  சம்பளத்தை உயர்த்திய தளபதி நடிகை Malavika Mohanan


  English summary
  Vijay TV Fame Jacquline Fernandas is rocking in TV serials too.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X