பைரசி வந்தும் ஜனநாயகன் ஹவுஸ்ஃபுல்? இமயமலைக்கு ஓடிடட்டுமா?.. கதறும் தலைவர்: மீண்டும் ப்ளூ சட்டை மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ளூ சட்டை மாறனின் சோஷியல் மீடியா பதிவுகள் அடிக்கடி விவாதத்தை ஏற்படுத்தி விடும்.. அந்தவகையில் இன்று "ஜனநாயகன்" (Jananayagan) படம் தொடர்பாக அவர் தொடர்ந்து பதிவுகளை பதிவிடடு வருகிறார்.. , தவெக அமைச்சர் ஃபர்வேஸ் குறித்து இன்று காலையிலேயே ஒரு ட்வீட் பதிவிட்டிருந்த நிலையில், பைரசி குறித்து இன்னொரு கிண்டல் பதிவையும் பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.. இந்த பதிவுக்கு இணையவாசிகள் ஆதரவு, எதிர்ப்பு என மாறி மாறி கருத்துகளை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயகன் படத்தின் முதல் ஷோ வெளியானது முதல் ரசிகர்கள், அந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.. இணையத்தில் இந்த படத்தின் ஓபனிங் சீன், விஜய்யின் அறிமுகம், அரசியல் டயலாக்குகள் என அத்தனை விஷயங்களையும் பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.

Jana Nayagan

ஜனநாயகன் ஹவுஸ்ஃபுல்

சிலர் இந்த படத்தில் குறைகள் இருப்பதாக சொன்னாலும், பெரும்பாலான பதிவுகள் நேர்மறையான விமர்சனங்களாகவே உள்ளன. இந்த நிலையில், படத்தை தியேட்டரில் பார்த்த தவெக அமைச்சர் ஃபர்வேஸ், விஜய்யின் ஓபனிங் சீனை பார்த்ததுமே எமோஷனலாகி விட்டார்.. கண்ணீர் விட்டு அழுதார்.. கர்சீப்பால் முகத்தை துடைத்து கொண்டார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டார் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்ட நிலையில், "அமைச்சரே அழும் அளவுக்கு படத்தில் என்ன இருக்கிறது?" என்றும் பலர் கேள்வி எழுப்பவே செய்தனர்.

மீண்டும் ப்ளூ சட்டை மாறன்

உடனே சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எல்லா பக்கமும் கேமரா... போதாததுக்கு ஃப்ளாஷ் லைட் வேற. தவெக அமைச்சர் ஃபர்வேஸ்... ஜனநாயகன் பார்த்து அழுகிறார். இப்போ இத பார்த்து நாங்களும் அழுகணுமா?" என்று கிண்டலாக பதிவிட்டார்.

அந்த பதிவும் சோஷியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தியது. ஒருவரின் உணர்ச்சியை கேலி செய்யக்கூடாது என்று விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.. ஆனால், பலரும், அமைச்சர் ஒரு படத்தை பார்த்து இவ்வளவு உணர்ச்சிவசப்படுவது சரியா என்றும் கேள்வி எழுப்பினர்.

பைரசி வந்தும் கலெக்‌ஷன்

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் இப்போது மேலும் ஒரு பதிவை வெளியிட்டு மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். அதில், "தலீவர் நவ்: ஜெயிலர் கலெக்சனை இது தாண்டிடுமா? பைரசி வந்து பல நாள் ஆனபிறகும்... இவன் படம் ஹவுஸ் ஃபுல் ஆகுதே? என் ரசிகர்கள் முகத்துல எப்படி முழிப்பேன்? அரசியல், சினிமா ரெண்டுலயும் என்னை காலி பண்ணிட்டான். பேசாம நான்.. தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு யாரை குறிவைத்து வெளியிடப்பட்டது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் அவரது பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் குவிந்து வருகின்றன.

ஜனநாயகன் படம் வெளியாகி பல நாட்கள் கடந்த பிறகும், பைரசி பதிப்புகள் இணையத்தில் வெளியான நிலையிலும், பல தியேட்டர்களில் ரசிகர்கள் வருகை தொடர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், படத்தின் வரவேற்பை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் இப்படி கிண்டலாக பதிவிட்டுள்ளது, மீண்டும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை பெற்று வருகிறது....!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+