பொங்கிட்டாளே ஜனனி... பாவம் அவளும் பெண்தானே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல்,பார்ப்பவர்கள் பொறுமையை ரொம்ப சோதிப்பதா இருக்கு.

சந்தோஷுக்கு விருப்பமில்லாத கல்யாணம்தான் நடந்துச்சுன்னு தெரிஞ்சதிலிருந்து அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் போறா ஜனனி.

ஒரு கட்டத்தில் சந்தோஷ் வேற லாயரை பார்க்கலாமான்னு கேட்க கொதிச்சு பொங்கி எழுந்துடறா ஜனனி.

கவுன்சிலிங்

கவுன்சிலிங்

நடிகை ஊர்வசி இந்த சீரியலில் சைக்யாட்ரிஸ்ட்டா நடிச்சு இருக்காங்க. உண்மையாவே இவங்க கவுன்சிலிங் தர மாதிரியே நடிச்சு இருக்காங்க. சந்தோஷுக்கும் ஜனனிக்கும் எத்தனையோ டெஸ்ட் வச்சும், விவாகரத்துக்கான சரியான காரணம் அவங்களுக்கு கிடைக்கலை.

ஒரு வருஷம்

ஒரு வருஷம்

என்னால எந்த குறையும் உங்ககிட்ட கண்டு பிடிக்க முடியலை. அதனால, பேசாம ஒரு வருஷம்தானே சேர்ந்து வாழ்ந்துருங்க..அப்புறம் விவாகரத்துக்கு வாங்கன்னு சொல்லி அனுப்பிடறாங்க. அதுக்குள்ள உஙக மனசு மாறினாலும் மாறும்னும் சொல்லறங்க.

சந்தோஷ் பேச்சு

சந்தோஷ் பேச்சு

காரில் வீட்டுக்கு திரும்பி வரும்போது சந்தோஷ்,ஒரு வருஷம்தானேன்னு சொல்றாங்க... ஒரு வருஷம் ஜனனி..எப்படி வாழறதுன்னு கேட்கறான். ஜனனி பேசாம வர்றா. இந்த லாயர் ரொம்ப இழுக்கடிக்கறாரு.. நாம வேற லாயர் பார்க்காலாமான்னு கேட்கறான்.

ஜனனி பேசலை

ஜனனி பேசலை

ஜனனி பேசாமலிருக்க.. ஜனனி.. என்னங்க எதுவும் பேசாம இருக்கீங்கன்னு கேட்கறான். ஒண்ணுமில்லைங்க தலைவலின்னு சொல்றா. காரை ஓரமா நிறுத்திட்டு வாங்க இஞ்சி டீ சாப்பிடலாம்னு சொல்றான்.

பொங்கிடறா ஜனனி

பொங்கிடறா ஜனனி

நான் டீ கேட்டேனா.. ஏன் உங்க எண்ணத்தை என்மேல திணிக்கறீங்கன்னு கேட்கறா. இல்லை தலை வலிக்குதுன்னு சொன்னீங்களே... அதாங்கன்னு சொல்றான். சரி வாங்கன்னு உள்ளே போறா. உங்களுக்கு தலைவலின்னா நான் எப்படிங்க சும்மா இருக்க முடியும்னு கேட்கறான்.

ஓ இப்படி எல்லாம்

ஓ இப்படி எல்லாம்

ஓ..இப்படி எல்லாம் வேற நினைக்கறீங்களா?அவ்ளோ அக்கறையா என் மேலேன்னு கேட்கறா..ஏங்க நான் எண்ணங்க பண்ணினேன்னு கேட்கறான் .. கல்யாணமாயிருச்சு வேற பொண்ணை காதைச்சேன்னு சொன்னீங்க. டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு சொன்னீங்க நானும் ஒத்துக்கிட்டேன்.

அதுக்காக இப்படியா

அதுக்காக இப்படியா

அதுக்காக இப்படியா என்னை அலைக்கழிப்பீங்க... ஒவ்வொரு தடவையும் எதனால டைவர்ஸ் பண்றீங்கன்னு ஒவ்வொருத்தரும் கேட்கும்போது பதில் சொல்ல முடியாம உங்களுக்கு முன்னாலதானே தவிச்சு நின்னு இருக்கேன்.அதை பத்தி என்னிக்காவது நினைச்சு இருக்கீங்களா?இப்பவும் வேற லாயரை பார்க்கலாம்னு சொல்றீங்கன்னு அழறா.

ஜனனி

ஜனனி

அழாதீங்க ஜனனி..எல்லாரும் பார்க்கறாங்க... இனிமே ஒரு வருஷம் வரைக்கும் டைவர்ஸ் பத்தி பேச மாட்டேன். ஒரு வருஷம் கழிச்சு தானா டைவர்ஸ் கிடைச்சுரும்னு சொல்ல ஜனனி விருட்டுன்னு எழுந்து போறா.

எத்தனை நாளைக்குத்தான் ஒரு பொண்ணு இப்படி பொறுமையா இருக்க முடியும்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+