அடடா...ஜனனி பொங்கி எழுந்துட்டா... இதுதான் வேணும்...!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் ஜனனி இன்னிக்குத்தான் உருப்படியா சந்தோஷிடம் தன் கோவத்தை காமிச்சு இருக்கா.
சக்தியை சந்தோஷ் காதலிக்க விதி வசத்தால் ஜனனியை கல்யாணம்பண்ணிக்க நேர்ந்துடுது. முதலிரவு அன்னிக்கே ஜனனியிடம் விவாகரத்து பற்றியும் பேசிடறான் சந்தோஷ்.
ஜனனி விவாகரத்துக்கும் சம்மதிச்சுடறா. அவன் எந்த , வக்கீலை பார்க்கணும்னாலும், எங்கே கவுன்சிலிங் போகணும்னாலும் ஜனனி மனசுக்குள் இருப்பதை வெளியில் காட்டிக்காம சந்தோஷ் விருப்படி நடந்துக்கறா.

சந்தோஷ் குடும்பத்தில்
ஜனனி என்னதான் விவாக ரத்துக்கு என்று ஒரு புறம் யாருக்கும் தெரியாமல் அலைந்துக்கொண்டு இருந்தாலும், குடும்பத்தின் மருமகள் எப்படி நடந்து கொள்வாளோ அதன்படி அனைவருக்கும் பிடித்த மாதிரி நடந்துகொண்டு இருக்கிறாள்.. எல்லாருக்கும் ஜனனியை பிடிச்சுப் போகுது.

சந்தோஷை பிடிக்கும்
ஜனனிக்கு சந்தோஷை பிடிக்கும்...அவனிடம் வாழவும் ஆசைப்படுவா...அவன் காதலியுடன் வாழ்வது சந்தோசம் என்றாலும் விட்டுக் கொடுப்பா. அந்த அளவுக்கு ஜனனிக்கு சந்தோஷ் என்றால் இஷ்டம்.

முத்தமிட அருகில்
ஒருநாள் ஜனனியை முத்தமிட அருகில் வந்து, அவளின் கண்கள்,நெற்றி இவற்றில் முத்தமிட்டான் சந்தோஷ். அடுத்து இதழ்களில் முத்தமிட்ட செல்கையில் காதலி சக்தியிடமிருந்து போன் வருது.போனை வெளியில் எடுத்துகிட்டு பேசப் போகிறான்.

ஜனனியிடம் பேச்சு
அதன் பிறகு ஜனனியிடம் சந்தோஷ் அவ்வளவாக பேசுவதில்லை. வீட்டிலும் அதிக நேரம் இருப்பதில்லை. கடைசியில் ஜனனி விவாகரத்து செய்த பின்னர் இவன் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை ஜனனி கல்யாணம் பண்ணிக்கனும்னு உளறிட...

கொந்தளிக்கறா ஜனனி
ஜனனி உடனடியா கொந்தளிச்சு போயிடறா... என்னங்க நீங்க...கல்யாணத்து அன்னிக்கே விவாகரத்துன்னு என்னோட கனவுகளை கலைச்சீங்க. அதுக்கும் நீங்க இழுத்த இழுப்புக்கு வந்தேன். அதுக்கு பிறகு சின்ன சின்ன சந்தோஷங்களை தந்து என்னை மகிழ்விச்சீங்க...

விலகினீங்க திடீர்னு
திடீர்னு விலகிப் போனீங்க...அதுக்கும் சரின்னு விட்டுட்டேன்...இப்போ என்னடான்னா... உங்களை விவகாரத்து பண்ணினத்துக்குப் பிறகு நான் நீங்க பார்த்து வச்சிருக்கற மாப்பிள்ளையை கட்டிக்கணும்னு உத்தரவு போடறீங்க?

நெருப்பு சுடற மாதிரி
என் வாழக்கையை நான் வாழ எனக்கு உரிமை இல்லையா...விவகிக்கறத்து ஆனதுக்குப் பிறகு எனக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க யாருங்க? என்று ஜனனி கேட்க அதில்லைங்க ஜனனின்னு அவன் அவள் கையைப் பிடிக்க, தொடாதீங்க..நெருப்பு சுடற மாதிரி இருக்குன்னு கர்ஜிக்கறா ஜனனி.
சூப்பர்... பொண்ணுங்க இப்படித்தான் இருக்கணும்...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications