மாயமோ.. மந்திரமோ... பிறந்த வீடு ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ்
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலில் சந்தோஷின் அண்ணி பூஜை, பரிகாரம்னு சொல்லி ஜனனியை அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.
வீட்டில் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தங்கை எல்லாரையும், சும்மா அப்பாவைப் பார்த்துக்கத்தான் அனுப்பி வச்சாங்க..வந்தேன்னு சொல்லி சமாளிச்சுடறா.
மனதுக்குள் வெறுமை பொங்கி வழிந்தாலும், பாத்ரூமில் குமுறி குமுறி அழுதுவிட்டு வந்து நார்மலாக இருக்கா ஜனனி. காலையில் எழுந்து தங்கையை எழுப்ப அவளை பார்க்கறா ஜனனி

சந்தோஷ் தூங்கற மாதிரி
தங்கையை எழுப்பிவிட தூங்கும் அவளை பார்க்கறப்போ, சந்தோஷ் தூங்குவது நினைவுக்கு வருது. எழுப்ப போனவள் தயங்கி நிக்கறா. மறுபடியும் அவன் தூங்குவது கண் முன் வந்து போகிறது. எழுப்பாமல் போயிடறா.

காபி
ஜனனி புகுந்த வீட்டில் இருந்தது போல, இங்கும் குளித்து, பூஜை செய்து, சாம்பிராணி போட்டு வீடு நிறைய புகை நிறைந்து இருக்கு. பின்னர் காபி போட்டு எல்லாருக்கும் குடுக்கறா. தங்கச்சியை எழுப்ப, அவள் எழாமல் இருக்கா. உடனே அவள் மீது தண்ணீர் தெளிக்கறா ஜனனி.

விளையாட்டு
உடனே எழுந்த தங்கை ஜனனி மீது தண்ணீர் கொட்ட துரத்துறா. ரெண்டு பெரும் இப்படி விளையாடிகிட்டு இருக்க, ஜனனி வசமாக மாட்ட ஜனனி மீது தண்ணீர் ஊத்தறா தங்கச்சி. எங்கிருந்தோ இடையில் வந்த அண்ணி மீது அத்தனை தண்ணியும் கொட்டிட்டுது.

மீண்டும்
இது தெரியாம ரெண்டு பேரும் இன்னும் தண்ணி கொட்டி விளையாடறாங்க. இதை பார்த்து வந்த அன்னான், என்னது இது குளிச்சுட்டு துவட்டாம நிக்கறன்னு சிரிக்கறான்.ஓ.. உங்க தங்கச்சிங்க தண்ணி கொட்டி விளையாடறது நான் குளிச்ச மாதிரி தெரியுதான்னு பல்லை கடிக்கறாங்க அண்ணி.

சொல்லுங்க..
என்னதான் சொல்லுங்க பெண்களுக்கு பிறந்த வீடு ரொம்ப ஸ்பெஷலிங்க... அங்க ஒரு வசதியும் இல்லேன்னாலும், அதுதான் அவங்களுக்கு மாளிகை வீடு...அங்க அம்மா கையால சாப்பிடறதுதான் அமிர்தம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications