என்னங்கடா.. இப்படி குப்புறப்படுத்து.. கய்யா முய்யால்லாம் பண்றீங்க!
சென்னை: வடஇந்திய வெப் சீரிஸ் பார்க்கிறது போல இருக்கு என்று ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர் தமிழ் சீரியல்களை .அந்த அளவுக்கு பல சீரியல்களில் கசமுசா காட்சிகள் அதிகரித்து வருகின்றனவாம்.
ஒவ்வொரு சீரியலிலும் ரசிகர்களை ஈர்க்க விதம் விதமாக டிசைன் டிசைனாக பல உத்திகளைக் கையாளுகின்றனர் .
பாரதி கண்ணம்மா சீரியலை எடுத்துக் கொண்டால் ஹீரோயினை நடக்க விட்டு வைரலாக்கினர். அதேபோல ஒவ்வொரு தொடரிலும் ஒரு டெக்னிக் இருக்கிறது.

அதெல்லாம் டெக்னிக்மா
ஒவ்வொருவரும் ஒரு விதமான காட்சியமைப்பை உருவாக்கி ரசிகர்களை லயிக்க வைத்து தங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்கின்றன சானல்கள். இப்படித்தான் தேன்மொழி பிஏ சீரியலில் நேற்று ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.
தேன்மொழி பிஏ சீரியல் ஒரு சூப்பர் ஹிட் சீரியல் .விஜய் டிவியில் ஆங்கராக சில காலம் வலம் வந்தவரான ஜாக்லின்தான் இதன் நாயகி.

கொழுகொழு ஜாக்லின்
முன்பு குட்டையாக சிக்கென இருந்த ஜாக்லின் இப்போது கொஞ்சம் பூசினாற் போல ஆகி விட்டார் .நேற்றைய எபிசோடில் போற போக்கில் அவர் அனிதா சம்பத்தைக் கலாய்த்ததுதான் பெரிய ஹைலைட்டே .அதாவபது வீட்டை கழுவித் துடைத்துக் கொண்டிருப்பது போல காட்சி.

வச்சு செய்றாங்களே
அப்போதுதான் அனிதா சம்பத்தை வைத்து வாங்கி விட்டார். தரையைத் துடைத்தபடி வசனம் பேசிய அவர் இந்த மதர் இன்லாவுக்கு அனிதா சம்பத் போல மருமக வந்திருக்கணும் .அடிக்குரலில் நியூஸ் பேசியே படுத்தி எடுத்திருப்பா என்று கலாய்க்கிறார் ஜாக்லின் .அந்த சீனுக்கு வீடுகளில் செம கிளாப்ஸ்தான்.

வியர்க்க விறுவிறுக்க
காரணம் அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டில் அப்படி ஒரு பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். அடுத்த சீன்தான் கிளைமேக்ஸ் .தரையை அவர் துடைத்தபடி இருக்க ஹீரோ வந்து வழுக்கி விட்டு.. அப்படியே சினிமா ஸ்டைலில் ஜாக்லின் மீது கவிழ்ந்து விழுகிறான். ஆனால் பாடி ரெண்டும் டச்சாகலை .

மூக்குகளின் உரசல்
மாறாக மூக்கு இரண்டும் ஒட்டிக் கொள்கிறது .உதடுகளும் கூட லேசாக டச்சாவது போல தெரிகிறது . இருவரும் சினிமா ஹீரோ ஹீரோயின் போல அப்படியே பார்த்தபடி பரவசமாக கிடக்கிறார்கள். இந்த காட்சிக்குத்தான் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர் .என்னங்கடா சினிமாவில் வருவது போல இப்டியெல்லாம் பண்றீங்க என்று சிலர் கலாய்த்துள்ளனர்.

மனசு வலிக்கும்ல
இன்னும் சிலரோ தமிழில் ஒளிபரப்பாகும் வட இந்திய வெப் சீரிஸ் என்று சிலரும் கலாய்த்துள்ளனர் .என்ன சொல்லுங்க ஜாக்லின் மீது வந்து விழுந்தா ரசிகர்களுக்கு கஷ்டமாத்தானே இருக்கும். ரசிகர்களுக்கு மனசு வலிக்கத்தானே செய்யும் .இருந்தாலும் சீன் நல்லா ஒர்க் அவுட் ஆயிருக்குன்னு ரசிகர்கள் சொல்றாங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications