ரோஜா மலரே ராஜகுமாரி...ஆசைக்கிளியே அழகிய சச்சு!
சென்னை: ஜெயா டிவியில் ஆல்பம் என்று ஒரு நிகழ்ச்சி. இதைத் தொகுத்து வழங்கியவர் பெப்சி உமா. கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக இந்த நிகழ்ச்சி ஜெயா டிவியில் மறு ஒளிபரப்பாகி வருது.
ஆல்பம் ஷோவில் கலந்துக்கொண்ட பழம்பெரும் நடிகை சச்சு, போட்டோ ஆல்பத்தை பார்த்து தனது நினைவலைகளை பகிர்ந்துக்கொண்டார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே இதுதான்...
அதாவது ஒன்லி போட்டோவைப் பார்த்து மட்டும் நினைவுகளை பகிர்ந்துகொள்ள வேண்டும். நடிகை சச்சு தனது குழந்தை கால பருவம் முதலான நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்.

அக்கா மாடிலட்சுமி
மயிலாப்பூரில் மாடி வீட்டில் வசித்து வந்தோம் என்றும், அங்கு பல லட்சுமிகள் இருந்தார்கள்... அதில் என் அக்காவை கூப்பிட வேண்டும் என்றால் மாடி லட்சுமி என்று கூப்பிட்டு கூப்பிட்டு அவங்க பேர் மாடி லட்சுமின்னு நிலைச்சு போச்சு. அக்கா ஒரு படத்துக்கு டான்ஸ் ஆட போனபோது, சின்ன குழந்தையான என்னையும் கூடவே அழைச்சுட்டு போவாங்க. அப்போதுதான் ஏவிஎம் நிறுவனத்தில் என்னை பார்த்து ராணி படத்தில் குழந்தை நட்சத்திரமா அறிமுகப்படுத்தினாங்க என்று சொன்னார்.

53 வருஷம் 500க்கும் மேல் படங்கள்
ஆல்பம் ஷோவில் கலந்துக்கொண்ட போது, நடிக்க வந்து 53 வருடங்கள் ஆகி இருந்ததை குறிப்பிட்டார். அப்போது 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருந்ததாகவும் கூறினார்.இண்டஸ்ட்ரியில் அப்போது மிகச் சிறப்பாக பணியாற்றும் கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என்று இப்படி பணியாற்றி, இவர்களுடன் எல்லாம் பணியாற்றி இருக்கிறோம் என்று சொல்வதுதான் பெருமை என்று கூறினார்.

நாகேஷுடன் 70க்கும் மேல்
காதலிக்க நேரமில்லை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்து, எங்கள் ஜோடி எல்லாருக்கும் பிடித்துப் போனது என்றும், தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து இருப்பதாகவும் கூறினார் சச்சு.சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், பாலையா இப்படி நகைச்சுவை ஜாம்பவான்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறேன் என்பதில் பெருமை என்று கூறினார்.

சிறுமியாக இருந்தபோது
சிறுமியாக இருந்தபோதே சினிமாவில் நடிக்க வந்ததில், அக்காக்கள் மாதிரி எல்லாம் என்னால் பீச், சினிமா என்று என்ஜாய் பண்ண முடியலை. அம்மாகிட்டே சொன்னா, இப்போ உனக்கு தெரியாது... போக போக சினிமாவில் நடிகையானது குறித்து பெருமைப்படுவேன்னு சொல்வாங்க என்று சொல்லும்போது அம்மாவின் நினைவில் நெகிழ்ந்து கண் கலங்கினார் சச்சு.

ஜெயலலிதா அம்மா
ஜெயலலிதா அம்மாவுடன் 30 படங்கள் வரை நடிச்சு இருப்பேன். ரொம்ப நல்லா பழகுவாங்க. நிறைய புத்தகங்கள் படிப்பாங்க. டயலாக் பேப்பரை ஒரு முறை படிச்சுட்டு நான் ரெடின்னு தயாராகிருவாங்க. அதே மாதிரி ஒரே டேக்கில் நடிச்சுருவாங்க. சிஎம் ஆனாலும், எங்க நட்பு தொடர்ந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு என்று கூறினார் சச்சு.

சின்ன வருத்தம் உண்டு
காதலிக்க நேரமில்லை படம் வரைக்கும் ஹீரோயினா நடிச்சுக்கிட்டு இருந்தேன். ரோஜா மலரே ராஜகுமாரி பாடல் மூலம் ஹிட் ஹீரோயினாகவும் இருந்தேன். காதலிக்க நேரமில்லை படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை...அதையே குத்திருவாங்க.. பிறகு ஹீரோயினா நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். பாட்டியும் வேணாம்னு சொல்லிட்டாங்க. இருந்தாலும், விடாம கூப்பிட்டு நடிக்க வச்சதில் என் நடிப்பு பாதையே மாறி விட்டது. நல்ல மாற்றம்தான் என்றாலும், இன்றுவரை ஹீரோயினாவே நடிச்சுக்கிட்டு இருக்க முடியலைன்னு வருத்தம் இன்னும் இருக்கு என்று கூறினார் சச்சு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications