அஜீத் தி அல்டிமேட்... உங்கள் ஜெயா டிவியில்!
சென்னை: மே 1 உழைப்பாளர் தினம் என்பதோடு தல அஜீத் பிறந்தநாள் என்று அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கும் நாள். சில வருடங்களில் அவரது படம் கூட அன்றைய தினம் ரிலீசாகும். அதிலும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருப்பார்கள்.
Recommended Video
மே 1 என்றால் தொலைக்காட்சிகளில் நிச்சயம் அஜீத் படங்கள் ஒளிபரப்பப்படும். இந்த வருடம் ஜெயா தொலைக்காட்சியில் பில்லா படம் வெளிவந்த போது அஜீத்தை நேர்காணல் செய்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளார்கள்.
பில்லா படத்தில் அஜீத்துடன் நடித்த சந்தானம் அஜீத்தை நேர்காணல் செய்து இருக்கார். அந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி மே 1 தல அஜீத்தின் பிறந்த நாள் அன்று மறு ஒளிபரப்பு செய்ய உள்ளது.

வேண்டாம் கொண்டாட்டம்
கொரோனா தொற்று காரணமாக மக்கள் லாக்டவுனில் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். இதில் அஜீத் பிறந்தநாளில் ஹேஷ்டேக்குகள் ஆரம்பித்து ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர்.இந்த நிலையில்தான் அஜீத் பிறந்த நாள் கொண்டாட்டம் எதுவும் வேண்டாம் என்று அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்று என்று மக்கள் பயமும், பதட்டமும் நிறைந்து இருக்கிறார்கள். வெளியில் சுதந்திரமாக போக முடியலை. மனிதர்களிடம் உற்ச்சாகம் இல்லை.. சந்தோசம் இல்லை என்று வாட்டி எடுக்கிறது லாக்டவுன். இந்த நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை என்று அஜீத் அறிவித்து இருக்கார்.

ரசிகர்கள் திருப்தி
அஜத் ரசிகர்கள் எப்போதுமே அன்கண்டிஷனல் லவ் வைத்து இருப்பவர்கள் என்று அஜீத்தே இந்த நேரக்கனலில் சொல்லி இருக்கார். இப்படிப்பட்ட ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக ஜெயா டிவி பில்லா படத்துக்குப் பிறகு ஷூட் செய்த அஜீத்தின் நேர்காணலை மறு ஒளிபரப்பு செய்ய உள்ளது.

தல தல
இதில் இளம் பெண்கள், இளைஞர்கள் என்று பல தரப்பினரும் கலந்துக்கொண்டு அஜீத்திடம் நேரடியாக பேசும் வாய்ப்பை பெற்று உள்ளனர். அதில் ஒரு கல்லூரி மாணவி, ரசிகர்கள் உங்களைத் தல என்று அழைக்கிறார்களே அதுபற்றி என்ன நினைக்கிறீங்க... உங்களுக்கு பாட தெரியுமா? போன்ற கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள். இதுக்கு தல என்ன பதில் சொன்னார்? தல பிறந்த நாள் அன்று ஜெயா டிவி பாருங்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications