கயல் சீரியல் வில்லியிடம் இத்தனை புடவைகளா? ப்ளூ கலர் பட்டுப்புடவை ஜெயலலிதா கொடுத்ததாமே!
சென்னை: கயல் சீரியலில் நடித்து வரும் உமா ரியாஸ் தனக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த பட்டுப்புடவையை அப்படியே ஞாபகார்த்தமாக வைத்திருக்கிறார்.
கமலா காமேஷின் மகள் உமா. இவர் நடிகர் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாரிக் கான் எனும் மகன் உள்ளார். இவர் பிக்பாஸில் கலந்து கொண்டார். ஆனால் இவரால் அந்த சூழலை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கியே இருந்தார்.

இதையடுத்து அவர் அந்த சீசனில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் ஷாரிக் பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் அனிதா சம்பத்துடன் இணைந்து நடனமாடி அந்த போட்டியில் வெற்றி பெற்றார்.
ரியாஸ் கான் சில திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அது போல் உமா ரியாஸ் கான் குக் வித் கோமாளி சீசன் 1 போட்டியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் ரன்னர் அப்பாக வந்தார். இதையடுத்து அவர் ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

அந்த சேனலுக்கு UR என்ற பெயரை வைத்துள்ளார். இதுவரை அந்த சேனலில் அவர் சமையல் செய்வது, மீன் வாங்குவது, அழகு குறிப்புகள் உள்ளிட்டவைகளை கூறி வருகிறார். அந்த வகையில் மோதிரங்கள் கலெக்ஷன், வாட்ச் கலெக்ஷன், செப்பல் கலெக்ஷன், ஷூ கலெக்ஷன் ஆகியவைகளுக்கு மத்தியில் புடவை கலெக்ஷனை வெளியிட்டுள்ளார்.
அதில் அவரது சீமந்த புடவை முதல் அவரது தாய் வைத்திருந்த 45 ஆண்டுகால புடவை வரை அனைத்தையும் நேயர்களுக்கு காண்பித்துள்ளார். தற்போது கயல் சீரியலில் நடித்து வரும் உமா ரியாஸ், பணக்கார பெண்ணாக வருவதால் பெரிய பெரிய பார்டர் வைத்த புடவைகளை கட்டி வருகிறார். இதற்காக சில இடங்களில் அவர் புடவையை வாங்கி வருகிறார்.

அந்த வகையில் கயல் சீரியலுக்கு கட்டும் புடவைகளை தவிர்த்து அவர் வைத்திருக்கும் புடவை கலெக்ஷனை காண்பித்தார். அதில் அவர் டிசம்பர் மாதத்தில் பிறந்ததால் மார்கழி மாதத்தின் சின்னமான கோலம் டிசைன்களுடன் கூடிய புடவையை ஆர்டர் கொடுத்து செய்துள்ளதாக கூறினார். அதன் பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்ததாக ஒரு புடவையை காட்டினார்.
நீல நிறத்தில் அரக்கு நிற பார்டர் கொண்ட அந்த புடவையை ஒரு நிகழ்ச்சியில் உமா ரியாஸ் கான் பரதநாட்டியம் ஆடிய போது அதில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் பட்டுப்புடவை கொடுத்தாராம். அது போல் உமாவுக்கும் ஒரு புடவை கொடுத்துள்ளார். அந்த புடவையை அவர் நியாபகமாக வைத்திருப்பதாக உமா ரியாஸ் கூறுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications