ரூ.2 லட்சம் பணத்துடன் மருத்துவமனைக்கு ஓடிய நடிகர் அஜித்.. ஜெயலலிதாவையே ஈர்த்த மேட்டர்: பிரபலம் பளீர்
சென்னை: சினிமாவிலிருந்து வந்த எந்த நடிகர், நடிகைகளையும் ஜெயலலிதாவுக்கு பிடிக்காது. ஆனால், அஜித் என்றால் தனி பிரியம் உண்டு.. ஜெயலலிதா விரும்பி கட்சிக்கு அழைத்தும்கூட, தனக்கு அரசியல் வாடையே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார் அஜித்" என்று கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு தந்துள்ள பேட்டியில், தமிழா தமிழா பாண்டியன் பேசும்போது, "அஜித் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.. கருணாநிதியை மேடையில் வைத்தே எதிர்க்க துணிந்தவர்.. அந்த தெம்பும், திராணியும் இல்லாத ரஜினியால் இதை வெளியே சொல்ல முடியவில்லை. நேரு ஸ்டேடியத்தில் அன்று பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா எடுக்கப்பட்டது.

இதில், முதல்வராக இருந்த கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்போது அஜித், "என்னை அழுத்தம் தந்து இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார்கள்" என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்.. அஜித் இப்படி சொன்னதுமே, ரஜினி எழுந்து நின்று கைதட்டினார்.. இதுதான் அஜித்,
பட புரமோஷன்: தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார்.. தனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்றார்.. தங்களது படம் தயாரித்து வெளிவந்தால், புரமோஷனுக்காகவும், மக்களிடம் அந்த படத்தை கொண்டுபோவதற்காகவும், ரஜினி, விஜய் போன்றோர் ரசிகர் மன்றங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால், அஜித் அப்படி கிடையாது.
ரசிகர் மன்றத்தை ஏன் கலைத்தார் என்றால், ஒருநாள் கேம்பவுடா தியேட்டரில் இரவு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது நைட் ஷோ முடித்துவிட்டு திரும்பி வந்தவர்கள், அஜித்தின் ஷூட்டிங் நடப்பதை பார்த்து, தலையை பார்க்கணும் என்று திரண்டு வந்துவிட்டார்கள். ஷூட்டிங் நடந்து கொண்டிருந்ததால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ரசிகர் மன்றம்: இதனால், சுவர் ஏறி குதித்து அவர்கள் உள்ளே புகுந்ததால், கேமரா உள்ளிட்டவையெல்லாம் நொறுங்கிவிட்டன. இதனால் ஷூட்டிங் நின்றுவிட்டது. ரசிகர் மன்றத்தை கலைப்பதாக விடிந்ததும் காலையிலேயே அறிவித்துவிட்டார் அஜித்.
"உன்கிட்ட நேர்மை உள்ளது.. ஏழை, எளிய மக்களை நேசிக்கக்கூடிய பண்பு இருக்கு" என்று சொல்லி, அதிமுகவுக்கு அழைத்தார் ஜெயலலிதா. தனக்கு பின்பு அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்றும் அஜித்திடம் கேட்டுக் கொண்டார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவையே இம்ப்ரஸ் செய்தவர் அஜித்..
பத்திரிகை ஆசிரியர்: தராசு விக்னேஷ் ராஜ் என்ற என்னுடைய நண்பர், திரைச்சுவையின் ஆசிரியர், எடிட்டராக இருந்தார்.. அஜித் திருமணம் செய்தபிறகு 2 வருடங்களுக்கு, "அஜித் ஆண்மையற்றவர்" என்றே தன்னுடைய பத்திரிகையில் எழுதி வந்தார்..
ஒருநாள் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. இதைக்கேள்விப்பட்ட அஜித், நேராக மருத்துவமனைக்கு வந்தார், 2 லட்சம் ரூபாயை அவரது சிகிச்சைக்காக அங்கிருந்த டாக்டர்களிடம் தந்துட்டு, யாரிடமும் எதுவும் பேசாமல் கிளம்பி சென்றுவிட்டார். டாக்டர்கள் சொல்லித்தான் இந்த விஷயமே எங்களுக்கெல்லாம் தெரியும்.. இதற்குபிறகு நண்பர் குணமாகி வந்ததும், அதே தொகையை தந்துவிட்டு போனார்.
தனி பிரியம்: இந்த குணம்தான், ஜெயலலிதாவையே அஜித்திடம் நெருங்க வைத்தது. சினிமாவிலிருந்த வந்த எந்த நடிகர், நடிகைகளையும் ஜெயலலிதாவுக்கு பிடிக்காது. ஆனால், அஜித் என்றால் தனி பிரியம் உண்டு.. ஜெயலலிதா விரும்பி கட்சிக்கு அழைத்தும்கூட, தனக்கு அரசியல் வாடையே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார் அஜித். இந்தியன் என்ற பெருமையே போதும் என்று நினைக்கிறார்.. அதனால்தான் தற்போது கார் ரேஸில் வெற்றி பெற்றதுமே தேசியக்கொடியுடன் வந்தார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications